ஆன்மிகம்

திருமகளாகிய லட்சுமியுடன் வருபவர்கள் யார்?

Published On 2017-06-11 07:07 GMT   |   Update On 2017-06-11 07:07 GMT
உறவினர்களையும், செல்வச்செழிப்பையும், நல்ல அழகையும் திருமகளாகிய லட்சுமி வரும்போது நம்வீட்டுக்குள் அழைத்து வருவாள்.

மரம் தன்னை வெட்டுபவர்களுக்கும் நிழல் தந்து வெயிலால் வாடாமல் நம்மை காக்கிறது. அதுபோல, அறிவுடையவர்கள் தாம் வாழும் காலம் வரைக்கும் தமக்கு தீமை செய்தாலும், தம்மை நாடி வருபவர்களுக்கு தம்மால் முடிந்த வரையில் நன்மைகளையே செய்வர்.

சந்தனக்கட்டையை எவ்வளவு தேய்த்தாலும், அது தன் வாசனையிலிருந்து ஒரு சிறிதும் குறையாது. அதுபோல, பிறருக்கு கொடுத்துதவி வாழ்வதில் இன்பம் காணும் நல்லவர்கள், தாங்கள் வறுமையில் வாடினாலும் தன் இயல்பான கொடுக்கும் பண்பிலிருந்து விலக மாட்டார்கள்.

உறவினர்களையும்,செல்வச்செழிப்பையும், நல்ல அழகையும் திருமகளாகிய லட்சுமி வரும்போது நம்வீட்டுக்குள் அழைத்து வருவாள். அவள் நம்மை விட்டு நீங்கினால் மேற்சொன்னவையும் அவளோடு சேர்ந்து நீங்கி விடும்.


"சிவாயநம' என்று எண்ணித் துதித்து வாழ்வோருக்கு ஒரு நாளும் துன்பம் இல்லை. விதியை வெல்லும் மந்திரம் இது. தண்ணீரின் நிறமும், சுவையும் அது உள்ள நிலத்துக்கேற்ப அமையும். நல்லோரின் பெருமை அவர்களுக்குள்ள உதவும் பண்பினால் மட்டுமே அமையும்.

கண்ணின் பெருமை கருணையால் அமையும். பெண்களுக்கு கற்பு கெடாமல் வாழும் வலிமையே பெருமையாக அமையும்.
Tags:    

Similar News