ஆன்மிகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிறப்பு யாகம்

Published On 2017-05-15 07:40 GMT   |   Update On 2017-05-15 07:40 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மழை வேண்டி நேற்று சிறப்பு யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவி வருகிறது. எனவே, மழை பெய்ய வேண்டி தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகி றது. அதன்படி, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மழை வேண்டி வர்ண யாகம் நேற்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை கணபதிஹோமமும், தொடர்ந்து நாதஸ்வர கலைஞர்களின் இசையுடன் வர்ண யாகமும் நடத்தப்பட்டது. இந்த யாகம் கோவிலில் உள்ள கல்மண்டபத்தில் நடந்தது.

அப்போது, சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய மழை வேண்டி பதிகம் (தேவாரபாடல்) பாடப்பட்டது. யாகம் முடிந்த பின்பு, பூஜையில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் பாரதி, திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News