ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் 29-ந்தேதி குபேர மகாலட்சுமி சிறப்பு யாகம்

Published On 2017-04-27 07:41 GMT   |   Update On 2017-04-27 07:41 GMT
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற குபேரலிங்கம் சன்னதி உள்ள 3 கோவில்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் அட்சயதிருதியையொட்டி குபேர மகாலட்சுமி சிறப்பு யாகம் 29-ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற குபேரலிங்கம் சன்னதி உள்ள 3 கோவில்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்றாகும். பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற தலம் இதுவாகும். நெல்லையப்பர் கோவிலில் சுவாமி சன்னதி உள்பிரகாரத்தில் குபேரலிங்கம் சன்னதி உள்ளது.

இந்த சன்னதியில் அட்சயதிருதியையொட்டி 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பக்தர்களுக்காக சிறப்பு குபேர லட்சுமி ஹோமமும், காலை 9 மணிக்கு சிறப்பு குபேர மகாலட்சுமி சிறப்பு யாகமும் நடக்கிறது. தொடர்ந்து குபேரலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.



இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை தெரிவித்து ரூ.150 செலுத்தி கலந்து கொள்ளலாம். யாகத்தில் கலந்து கொள்கிறவர்களுக்கு குபேர மகாலட்சுமி நாணயம், குபேர மகாலட்சுமி ஐசுவர்யேசுவரர் உருவபடம், பஞ்ச முக ருத்திராட்சம், சிவப்பு கயிறு, தேங்காய்பழம் பிரசாதமாக வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் 29-ந் தேதிக்கு முன்பு தங்களது பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை தெரிவித்து கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து யாகத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பா.ரோஷினி தெரிவித்துள்ளார்.

Similar News