ஆன்மிகம்

சேடபட்டி அருகே உள்ள ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-03-31 04:48 GMT   |   Update On 2017-03-31 04:48 GMT
சேடபட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீகரியமால் அழகர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தனி சன்னதி அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சேடபட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீகரியமால் அழகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 5¾ அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தனி சன்னதி அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கான திருப்பணி வேலைகள் முடிந்து நேற்று அதிகாலை கணபதி, கோ, கஜ பூஜைகள் செய்யப்பட்டு, 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கிராமமக்கள் பால்குடம் எடுத்துவந்தனர். அதனை சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நல்லாசிரியர் சக்திவேல்கவுண்டர் தலைமையில் நடைபெற்றது.

பரிகாரபூஜைகளை கோவில் மூத்த அர்ச்சகர் அழகர் அய்யங்கார், கிருஷ்ணமூர்த்தி, ஆதிமூர்த்தி, பிச்சைமணி, வெங்கட்ராமன், ஜெனகநாராயணன் உள்ளிட்ட பட்டாட்சியர்கள் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News