ஆன்மிகம்
நீலகேசி அம்மன் கோவிலில் தூக்க நேர்ச்சை நடந்த போது எடுத்த படம். (உள்படம் நேர்ச்சைக்காரர்கள் கையில் குழந்தைகள்)

நீலகேசி அம்மன் கோவிலில் 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

Published On 2017-03-22 03:31 GMT   |   Update On 2017-03-22 03:31 GMT
குமரி மாவட்டம் குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
குமரி மாவட்டம் குலசேகரம் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. விழாவின் 7-வது நாளான நேற்று தூக்க நேர்ச்சை நடந்தது. இதையொட்டி நேற்று திருப்பள்ளி உணர்த்தல், பூஜை, அம்மன் எழுந்தருளல், அன்னதானம் போன்றவை நடந்தன.

பின்னர் நேர்ச்சை விரதம் மேற்கொண்டவர்கள் பனங்கோடு வீட்டில் இருந்து விழா நடைபெறும் பறம்பு நோக்கி சென்று அம்மனை வணங்கினர்.

பிறகு குற்றியோட்டம், பூமாலை, தாலப்பொலி, மஞ்சள்குடம், துலாபாரம், பிடிபணம் வாருதல், உருளு நேர்ச்சை ஆகியவை நடந்தன.



தொடர்ந்து, தூக்க நேர்ச்சை நடந்தது. முதலில் அம்மன் தூக்கம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 167 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடந்தது. இரவு சமய சொற்பொழிவு, பரிசு வழங்குதல், சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் 9-வது நாளான நாளை (வியாழக்கிழமை) கமுகு பிடுங்குதல் நிகழ்ச்சியும், 24-ந் தேதி பொங்கல் விழாவும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Similar News