ஆன்மிகம்

முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் 108 வலம்புரி சங்காபிஷேக விழா

Published On 2016-11-29 04:57 GMT   |   Update On 2016-11-29 04:57 GMT
முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடைபெற்றது.
முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடைபெற்றது. 108 வலம்புரி சங்குகளில் கங்கை, காவிரி தீர்த்தம் நிரப்பப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

சோமவாரத்தில் சங்காபிஷேக தரிசனம் செய்வது சர்வ பாவம் போக்கும் எனவும், மாலை சோமவார திங்கட்கிழமைகளில் அமாவாசை வருவதால் சிவ வழிபாடு செய்வது சிறப்பானது எனவும், சங்காபிஷேக பூஜைகளில் கலந்து கொள்வதன் மூலம் குடும்பத்தில் அனைத்து விதமான சுபகாரியங்கள் நடைபெறும் எனவும் கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

பூஜைகளை கோவில் குருக்கள் மாணிக்கசுந்தரசிவாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தினார். பூஜைகளில் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Similar News