ஆன்மிகம்

மங்கலம் தரும் மஞ்சள் ஆடை

Published On 2016-10-20 07:24 GMT   |   Update On 2016-10-20 07:24 GMT
திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறும் மஞ்சள் மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது.
திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். இதற்கு காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது தான் அட்சதை ஆகும்.

விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும். ஆரோக்கியம் சீராகும். மஞ்சள் அரைத்துத்தடவி பல நோய்கள் குணமாவதை மருத்துவர்கள் எடுத்துரைப்பர். அதற்காக முகத்தில் மஞ்சள்தடவி முன்பு பெண்கள் குளிப்பது வழக்கம். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த வஸ்திரம் மஞ்சள் நிற ஆடைதான்.

Similar News