ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா 30-ந்தேதி நடக்கிறது

Published On 2016-09-23 08:43 GMT   |   Update On 2016-09-23 08:43 GMT
திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு “வேல்” எடுக்கும் திருவிழா 30-ந்தேதி நடக்கிறது
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசிவிசுவநாதர் கோவில் மற்றும் மலைமேல்குமரர் சன்னதி வளாகத்தில் என்றென்றும் வற்றாத (சுணை) தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது தெய்வீகபுலவர் நக்கீரருக்காக முருகப் பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள “வேல்” கொண்டு மலையின் பாறையை கீறி உருவாக்கியதாக புராண செய்தி கூறுகிறது.

இதை நினைவூட்டும் வகையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஓரு வெள்ளிக்கிழமையன்று கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான் திருக்கரத்தில் இருந்து “தங்கவேல்” எடுத்து மலை உச்சியில் உள்ள சுணைக்கு எடுத்து சென்று மகாஅபிஷேகம் நடை பெறுவது வழக்கம். 

அதேபோல இந்த ஆண்டிற்கு மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா வருகின்ற 30-ந்தேதி விமரிசையாக நடக்கிறது அன்று மாலையில் மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் வேல் புறப்பட்டு நகர் உலாவந்து இருப்பிடம் செல்லுகிறது.

Similar News