வழிபாடு

நாகூர் சில்லடி தர்கா கந்தூரி விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-08-30 05:25 GMT   |   Update On 2022-08-30 05:25 GMT
  • சந்தனக்கூடு விழா வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.
  • இதில் திரளான முஸ்லம்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டம் நாகூரில் சில்லடி தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக தர்கா அலங்கார வாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு செய்யது பள்ளி தெரு, தெற்கு தெரு, புதுமனைதெரு, பீரோடும் தெருவழியாக சென்று சில்லடி தர்காவை அடைந்தது.

இதை தொடர்ந்து தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி கொடியேற்றப்பட்டது. இதில் போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் திரளான முஸ்லம்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News