ஆன்மிகம்
பழஞ்சிறை தேவி

மாங்கல்ய பாக்கியம் அருளும் பழஞ்சிறை தேவி

Published On 2016-04-08 04:04 GMT   |   Update On 2016-04-08 04:04 GMT
மாங்கல்ய தோஷம், திருமண தடை நீக்கும் பழஞ்சிறை தேவி.
கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

நவராத்திரி விழா காலத்தில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன் அணையாத ‘ஹோமம்’ நடைபெறும். நவராத்திரி ஒன்பது தினங்களிலும் சண்டி ஹோமம் நடத்தப்படும்.

கோவிலின் வெளிப்பக்கம் அரசமரம் செண்பகமரம் உள்ளிட்ட பல்வேறு செடிகொடிகள் வளர்ந்து அழகு சோலையாக காட்சியளிக்கின்றது. இதனை ‘சர்ப்பக்காவு’ (நாகர் சோலை) என அழைக்கின்றனர். இங்குள்ள நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு–கேது தோஷம் நீங்கப்பெற்று நலன் பெறுவர்.

பழஞ்சிறை தேவி கோவிலுக்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்குகிறது. தேவிக்கு வழிபாடாக மாங்கல்யம் அணிவிக்கும்போது மாங்கல்ய பாக்கியம் ஏற்படுகிறது. பழஞ்சிறை தேவிக்கு ஆடை அணிவித்து அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்கின்றனர். மேலும் தினசரி பொங்கல் படைத்து பெண்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதும் உண்டு.

பழஞ்சிறை தேவியை வழிபடுவோருக்கு இனி பிறவி இல்லை என்பதோடு இப்பிறவியில் தொல்லைகள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்வு அமையும் என்று நம்பப்படுகிறது.

திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் பாதையில் ‘அப்பலத்தரா’ என்ற இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில்.

Similar News