சினிமா செய்திகள்
யுவன் சங்கர் ராஜா - கார்த்தி

பரிசளித்த கார்த்தி.. நெகிழ்ந்த யுவன்.. வைரலாகும் புகைப்படம்

Update: 2022-05-22 08:12 GMT
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு, நடிகர் கார்த்தி பரிசளித்து அவரை நெகிழவைத்துள்ளார்.
சரத்குமார் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான படம் 'அரவிந்தன்'.  இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிமுகமானார். அதன்பிறகு 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் தனித்துவமாக அடையாளப் படுத்தி அனைவரையும் கவர்ந்தார். இவர் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 


கார்த்தி - யுவன் சங்கர் ராஜா

இதனையொட்டி யுவன் சங்கர் ராஜாவுக்கு சமீபத்தில் விழா நடத்தப்பட்டது. இதில் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிலையில் திரையுலகில் 25 வருடங்களை நிறைவு செய்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நடிகர் கார்த்தி விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கி நெகிழவைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News