சினிமா செய்திகள்
null

"தக் லைஃப்" படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

Published On 2024-05-10 11:28 GMT   |   Update On 2024-05-10 11:30 GMT
  • தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியது.
  • கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிலம்பரசன். இவர் தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சிம்புவின் 48 ஆவது திரைப்படம் ஆகும். இதுதவிர நடிகர் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

முன்னதாக கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுக்கு ரூ. 9 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாகவும், அதில் ரூ. 4 கோடி வரை முன்பணமாக சிம்புவுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. எனினும், முன்பணம் பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, கொரோனா குமார் படம் தவிர மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 


இதை எதிர்த்து வேல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் நடிகர் சிம்பு செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும். உத்தரவாதம் அளிக்காத பட்சத்தில் சிம்பு மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டுருந்தது.

இந்த நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்கக்கூடாது. அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கொரோனா குமார் படத்தை சிம்பு முடித்துக் கொடுக்கவில்லை. இதனால் அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News