search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ishari Ganesh"

    • தமிழகத்தில் விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது.
    • ஃபுட்பால் விளையாட்டை தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன்.

    வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் ஃபுட்பால் பிளஸ் U-13, U-15 மற்றும் U-17 யூத் லீக்களுக்கான புதிய ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி, பாலக்காட்டை சேர்ந்த ஜிதினுக்கு ஸ்பெயினில் ஓராண்டு பயிற்சிக்காக தனது பங்களிப்பாக ரூ.22 லட்சத்திற்கான காசோலையும் ஐசரி கணேஷ் வழங்கினார்.

    இதுகுறித்து ஐசரி கணேஷ் பேசியதாவது, "இன்று தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிகவும் மேம்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்னும் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஃபுட்பால் விளையாட்டை தமிழகத்தில் இன்னும் பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே வேல்ஸ் ஃபுட்பால் அகாடமி ஆரம்பிக்க இருக்கிறோம், இதற்காக நல்ல திறமையாளர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன்.

    அந்த வகையில், கேரளாவை ஜிதின் என்பவருக்கான செலவுகளை மொத்தமாக நாங்கள் ஏற்றுள்ளோம். வேல்ஸ் ஃபுட்பால் அகாடமி 2023-24 சீசனுக்கான முதல் லீக்கிற்குள் நுழைவதாக அறிவித்துள்ளது. வரவிருக்கும் சீசனுக்கு அணி தயாராகி வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே நடந்து வருகின்றன.

    வேல்ஸ் ஃபுட்பால் அகாடமி லீக்கில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதையும், இளம் கால்பந்து திறமைகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பைத் தொடர்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றார்.

    புதிய ஜெர்சிகளின் அறிமுகம் மற்றும் ஸ்பெயினில் ஜிதினின் பயிற்சிக்காக டாக்டர் ஐசரி கே. கணேஷின் ஸ்பான்சர்ஷிப் ஆகியவை கால்பந்தை ஊக்குவிப்பதிலும் இளம் வீரர்கள் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவதிலும் அவர்களின் அர்ப்பணிப்பை மேலும் ஊக்குவிக்கிறது.

    டேவிட் ஆனந்த் தலைமையிலான ஃபுட்பால் பிளஸ், தமிழ்நாட்டின் சென்னையை மையமாகக் கொண்ட ஒரு தொழில்முறை கால்பந்து அகாடமி ஆகும். அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (AIFF) அங்கீகாரம் பெற்றுள்ள இந்த நிறுவனம், பயிற்சி மற்றும் இளைஞர்களின் கால்பந்து மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    • இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஞ்சய் சுப்பிரியாவை வீழ்த்தி ஐசரி கணேஷ் வெற்றி பெற்றார்.

    இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கணேஷ் அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரிய அவர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார்.




     


    ஐசரி கணேஷ் அவர்களுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரிய அவர்களுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர். மேலும் ஐசரி கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் முத்திரை பதித்தனர்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று சமீபத்தில் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கவுதம் மேனன் கூறியிருந்தார்.


    சிம்பு - ஐசரி கணேஷ்

    இதையடுத்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை ஐசரி கணேஷ் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.


    ஐசரி கணேஷ் - கூல் சுரேஷ்

    'வெந்து தணிந்தது காடு'  திரைப்படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ்  செல்லும் இடமெல்லாம் புரொமோஷன் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

     

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதைக்கு, கவுதம் மேனன் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

     

    சிம்பு - ஐசரி கணேஷ்

    சிம்பு - ஐசரி கணேஷ்

    இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதே போல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கை ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    ×