சிம்புக்கு கார், கவுதம் மேனனுக்கு பைக்... தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.
வெந்து தணிந்தது காடு 
வெந்து தணிந்தது காடு 
Published on

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்
கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதைக்கு, கவுதம் மேனன் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

சிம்பு - ஐசரி கணேஷ்
சிம்பு - ஐசரி கணேஷ்

சிம்பு - ஐசரி கணேஷ்

இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதே போல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கை ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com