கூல் சுரேஷ்
கூல் சுரேஷ்

சிம்பு, கவுதம் மேனனைத் தொடர்ந்து கூல் சுரேஷுக்கு கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.
Published on

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று சமீபத்தில் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கவுதம் மேனன் கூறியிருந்தார்.

சிம்பு - ஐசரி கணேஷ்

இதையடுத்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை ஐசரி கணேஷ் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

ஐசரி கணேஷ் - கூல் சுரேஷ்

'வெந்து தணிந்தது காடு'  திரைப்படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ்  செல்லும் இடமெல்லாம் புரொமோஷன் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com