search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gautam menon"

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.

    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

     

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் கதைக்கு, கவுதம் மேனன் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கவுதம் மேனன் அறிவித்துள்ளார்.

     

    சிம்பு - ஐசரி கணேஷ்

    சிம்பு - ஐசரி கணேஷ்

    இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதே போல் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கை ஐசரி கணேஷ் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    • பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தக்ஸ்.
    • இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா சென்னையில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

    பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் தக்ஸ். இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார். 'தக்ஸ்' திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

     

    இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

     

    அதில் பேசிய நடிகர் ஆர்யா, "பிருந்தா மாஸ்டர் உடன் பல படங்கள் பணிபுரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்‌ஷனோடு தான் இருக்கும். அது இந்த படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.

     

    இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, "பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்‌ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2-ம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்தின் 2-ம் பாகமும் உருவாகவுள்ளது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

     

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

    இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படப்பிடிப்பை தொடங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வேட்டையாடு விளையாடு

    வேட்டையாடு விளையாடு

     

    கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நல்ல வசூலும் பார்த்தது. கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படத்தில் நாயகிகளாக ஜோதிகா, கமாலினி முகர்ஜி ஆகியோரும், வில்லனாக டேனியல் பாலாஜியும் நடித்து இருந்தனர்.

    • கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்பு இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார்.
    • கவுதம் மேனனின் மகன் ஆர்யா யோஹான் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

    மின்னலே படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். அதன்பின் காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

    ஆர்யா யோஹான்

    ஆர்யா யோஹான்

    கவுதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹான். 19 வயதாகும் இவர் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும், சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் களம் இறங்கின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆர்யா யோஹான் தனது அணிக்காக முதல் விக்கெட்டை வீழ்த்தினார். சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் விளையாடிய ஜாஃபர் ஜமால் முதல் ஓவரில் 11 ரன்கள் விளாசினார். இரண்டாவது ஓவர் வீசிய ஆர்யா யோஹான் தனது முதல் பந்திலேயே ஜமாலின் விக்கெட்டை வீழ்த்தினார்.

    இப்போட்டியில் மொத்தம் 3 ஓவர்கள் வீசிய ஆர்யா யோஹான் 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மற்றும் 1 ரன் அவுட் செய்தார். இந்த போட்டியில் நெல்லை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×