கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் கமல்? 2-ம் பாகம் எடுக்க திட்டம்

கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கமல் - வேட்டையாடு விளையாடு
கமல் - வேட்டையாடு விளையாடு
Published on

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது இந்தியன் 2-ம் பாகத்தில் கமல் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்த விக்ரம் படத்தின் 2-ம் பாகமும் உருவாகவுள்ளது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு

இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படப்பிடிப்பை தொடங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேட்டையாடு விளையாடு
வேட்டையாடு விளையாடு

வேட்டையாடு விளையாடு

கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நல்ல வசூலும் பார்த்தது. கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த இப்படத்தில் நாயகிகளாக ஜோதிகா, கமாலினி முகர்ஜி ஆகியோரும், வில்லனாக டேனியல் பாலாஜியும் நடித்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com