search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இவர் மாஸ்டர் இல்ல மான்ஸ்டர்- திரைப்பிரபலத்தை புகழ்ந்த கவுதம் மேனன்
    X

    கவுதம் மேனன்

    இவர் மாஸ்டர் இல்ல மான்ஸ்டர்- திரைப்பிரபலத்தை புகழ்ந்த கவுதம் மேனன்

    • பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தக்ஸ்.
    • இப்படத்தின் கதாப்பாத்திர அறிமுக விழா சென்னையில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

    பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் தக்ஸ். இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா சிபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பிரியேஷ் குருசாமி மேற்கொண்டுள்ளார். 'தக்ஸ்' திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

    இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இயக்குனர்கள் கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், தேசிங்கு பெரியசாமி, ரவியரசு, குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், கலா மாஸ்டர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    அதில் பேசிய நடிகர் ஆர்யா, "பிருந்தா மாஸ்டர் உடன் பல படங்கள் பணிபுரிந்துள்ளேன். அவருடைய நிஜ கதாபாத்திரம் ஆக்‌ஷனோடு தான் இருக்கும். அது இந்த படத்தில் பிரதிபலித்து இருக்கிறது. பவர்புல்லான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தில் இருக்கிறது. படத்தின் டீசரில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. தயாரிப்பாளர் சிபு, எல்லாவற்றிலும் தனித்துவத்தை எதிர்பார்க்கும் ஒருவர், இந்தப் படம் அவர் நினைத்தது போல் இருக்கும். இந்த படத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன். ஒட்டுமொத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.

    இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, "பிருந்தா ஒரு மான்ஸ்டர், என்னுடைய அனைத்து படங்களிலும் பாடல்கள் சிறப்பாக வர அவரும் ஒரு காரணம். வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க பாடலில் வரும் ஆக்‌ஷன் பகுதிகளை அவர் தான் இயக்கினார். அதனால் அவர் ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்குகிறார் என்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமில்லை, அவர் கண்டிப்பாக பெரிய இடத்தை தொடுவார். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்" என்றார்.

    Next Story
    ×