சினிமா

8-ஆம் தேதி திரையுலகினர் போராட்டம் - நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

Published On 2018-04-05 06:53 GMT   |   Update On 2018-04-05 06:53 GMT
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளுக்காக 8-ந்தேதி திரையுலகினர் நடத்தும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது. #BanSterlite #CauveryManagementBoard
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வருகிற 8-ந்தேதி நடிகர்-நடிகைகளின் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



“திரையுலகினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மத்திய அரசினை வலியுறுத்தியும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்., தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து வருகிற 8-ந்தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன அறவழி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.



தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழகத்தின் சுற்று சூழலை காக்கின்ற பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதினாலும் தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகைகள், தொழிலாளர்கள், வினியோகஸ்தர்கள் அனைவரும் இந்த கண்டன அறவழி போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.“

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #BanSterlite #CauveryManagementBoard

Tags:    

Similar News