சினிமா செய்திகள்

ஜூன் 22 வெளியாகும் அடுத்த பாடல் - கோட் படத்தின் அப்டேட்

Published On 2024-04-30 15:40 GMT   |   Update On 2024-04-30 15:40 GMT
  • பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
  • தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

நடிகர் விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரிஷா மற்றும் விஜய்யின் காம்பினேஷன் பாடல் மிகப்பெரிய அளவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடைபெறும் எனவும். இப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். கில்லி படத்திற்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் நடித்தனர்.

அதைத்தொடர்ந்து கோட் திரைப்படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் படத்தில் நடித்துள்ள அஜ்மல் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணலில் படத்தின் அப்டேட்டை குறித்து பேசினார். சிஎஸ்கே ஐ.பி.எல் அணி வீரர்கள் இதில் நடித்துள்ளதாக வந்த தகவல்கள் உண்மையெனவும் , ஆனால் அது யார் என்று என்னால் சொல்ல முடியாது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் அதை கூற வேண்டும் என கூறியுள்ளார். படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடல் ஒரு காதல் பாடலாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News