சினிமா

விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?

Published On 2017-11-01 10:10 GMT   |   Update On 2017-11-01 10:11 GMT
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யாவின் படங்கள் பொங்கல் தினத்தில் மோதவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம் மற்றும் சூர்யாவின் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தற்போது விக்னேஷ் சிவா இயக்கத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷும், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இப்படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விமல் நடிப்பில் உருவாகி வரும் `மன்னர் வகையறா' படமும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் `ஸ்கெட்ச்' படமும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.



அதேநேரத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் `இரும்புத்திரை' படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறாக விக்ரம், சூர்யா, விஷால், விமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு அது சிறப்பு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Tags:    

Similar News