என் மலர்

  நீங்கள் தேடியது "Vikram"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
  • இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

  அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கோப்ரா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  விக்ரம்

  மேலும், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் "சியான் 61" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

  இந்நிலையில், நடிகர் விக்ரம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும், இவர் இணைந்த ஒரு சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் பலர் இவரை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமல்லாமல் இவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
  • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


  விக்ரம்

  இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் விக்ரம் படத்தை பார்த்து விட்டு நடிகர் விஜய் என்ன கூறினார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், "படம் வெளியான போது இணையத் தொடர்பு இல்லாத இடத்தில் இருந்தேன். மாலை வந்து பார்த்த போது மிகவும் அருமை என்று விஜய் சாரிடம் இருந்து செய்தி வந்திருந்தது.

  அதன் பின்னர் தொலைபேசியில் அவரை அழைத்து பேசினேன். விஜய் இருமுறை "விக்ரம்" படத்தை பார்த்துவிட்டார்" என்று கூறினார். லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67-யை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
  • இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

  டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

  லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை.


  கோப்ரா

  இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'கோப்ரா' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'கோப்ரா'.
  • இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

  டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் 'கோப்ரா'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

  லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் 'கோப்ரா' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


  கோப்ரா

  மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், பியானோவின் புகைப்படத்தை வெளியிட்டு " கோப்ரா" என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதனை வைரலாக்கும் ரசிகர்கள் கோப்ரா படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


  விக்ரம்

  இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது. பின்னர் 2020-ல் வெளியாகும் என்று எதிர்பார்த்து அப்போதும் வரவில்லை. இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக மீண்டும் முடங்கியது.

  இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் நடிகர் விக்ரமுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனால் துருவ நட்சத்திரம் பற்றிய பேச்சு மீண்டும் சமூக வலைதளங்களில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

  மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகவும் அதற்காக விக்ரம் 15 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.
  • இவர் சமூக வலைதளத்தில் இருந்து விலகியுள்ளார்.

  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

  இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். 


  லோகேஷ் கனகராஜ் - விஜய்

  இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

  லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்தார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலக உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்புடன் விரைவில் சமூக வலைதளப்பக்கத்திற்கு வருவேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
  • இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது.


  விக்ரம்

  அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படம் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

  அதன்படி, கிளைமேக்ஸில் வரும் 'ஒன்ஸ் அப்பான் ஏ டைம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகிறது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.
  • இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

  நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்து ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை கடந்துள்ளது.

  'விக்ரம்' வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் 'இந்தியன் 2' படப்பிடிப்பிற்கு பிறகு நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதில் நடிகர் பகத் ஃபாசிலும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  விக்ரம்

  மேலும், படம் குறித்த அப்டேட்கள் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மகேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் படம் சியான் 61.
  • சியான் 61 திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

  விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.


  'சியான் 61' பூஜை

  'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

  இந்நிலையில், 'சியான் 61' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கிளாமர் அல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் சியான் 61.
  • இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

  விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.


  சியான் 61

  'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.


  சியான் 61 பட பூஜை

  இதில் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரம், ஜி.வி. பிரகாஷ், கலையரசன்,  சிவகுமார், நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படம் சியான் 61.
  • இப்படத்தின் படப்படிப்பு ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

  'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித் 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் கவனம் செலுத்தியதால் 'சியான் 61' படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமானது.


  விக்ரம் - பா. ரஞ்சித்

  இந்நிலையில் நட்சத்திரம் நகர்கிறது படம் திரையிடுவதற்கு தயாராகவுள்ளதால் பா. ரஞ்சித் 'சியான் 61' படத்தின் பணிகளில் ஆர்வம் காட்டி வருவதாகவும் படப்பிடிப்பு ஓரிரு நாட்களில் சென்னையில் பூஜையுடன் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
  • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

  இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.


  பொன்னியின் செல்வன்

  சமீபத்தில் பொன்னியின் செல்வன் - 1 டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து படக்குழு நேற்று சமூக வலைதளத்தில் "நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசரை தவறவிட்டீர்களா? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் உள்ளது. அது இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது.

  அதன்படி, பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக நடிகர் விக்ரம் ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.