சினிமா

நவம்பர் 7-ல் கட்சி அறிவிப்பு இல்லை: கமல்

Published On 2017-10-26 11:26 GMT   |   Update On 2017-10-26 11:26 GMT
கமல் தனது பிறந்தநாளான நவம்பர் 7-ந் தேதி, கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று செய்திகள் வந்த நிலையில், தற்போது எந்த அறிவிப்பும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
சமீப காலமாக நடிகர் கமல் தான் கலந்துகொள்ளும் விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை, டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இப்போது நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்து வருகிறார். மேலும், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருடனும் ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்து, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் இன்று செய்திகள் வெளியானது.

ஆனால், நவம்பர் 7-ல் கட்சி அறிவிப்பு இல்லை என்று கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தன் டுவிட்டர் பக்கத்தில், ''ஊடக உந்தல் கருதி கட்சியை அறிவிக்க முடியாது. நவம்பர் 7 இயக்கத்தார் கூடுவது எம் பலவருட வழக்கம். பொது அறிவிப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்'' என்று பதிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News