சினிமா

இயக்குனர் ஐ.வி.சசி உடலுக்கு கமல், மோகன்லால் நேரில் அஞ்சலி

Published On 2017-10-24 16:44 GMT   |   Update On 2017-10-24 16:44 GMT
மலையாளம், தமிழ் மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஐ.வி.சசி இன்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது உடலுக்கு கமல் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
1970, 1980 மற்றும் 1990-களில் புகழ் பெற்ற இயக்குனர் ஐ.வி.சசி. தென் இந்திய மொழி படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர். 69 வயதான ஐ.வி.சசி சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் இன்று காலை 10.30 மணிக்கு மரணம் அடைந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

ஐ.வி.சசி மலையாளம், தமிழ் மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் மற்றும் காளி, குரு, பகலில் ஒரு இரவு உட்பட பல பிரபல நடிகர்களை வைத்து தமிழ் படங்களை இயக்கி உள்ளார்.

கடைசியாக அவர் 2009-ல் மலையாள படமான ‘வெள்ளதூவல்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். சசி மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது, நடிகர் கமல்ஹாசன், சசி இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Tags:    

Similar News