சினிமா

`டிக் டிக் டிக்' படத்தின் திரையரங்கு உரிமையை கைப்பற்றிய பெரிய நிறுவனம்

Published On 2017-09-16 06:45 GMT   |   Update On 2017-09-16 06:45 GMT
சக்தி சவுந்தர் ராஜள் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் `டிக் டிக் டிக்' படத்தின் திரையரங்க உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
ஜெயம் ரவி தற்போது சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்' படத்தில் நடித்து வருகிறார்.

‘மிருதன்’ படத்திற்கு பிறகு சக்தி சவுந்தர் ராஜன் - ஜெயம் ரவி - டி.இமான் மீண்டும் இணைந்திருக்கின்றனர். மேலும் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக `டிக் டிக் டிக்' உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவெற்பை பெற்றது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியிருப்பதால் இப்படத்தை வாங்க பலரும் முன்வந்தனர். இந்நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்து வருகின்றனர். இந்

இதில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆரோன் ஆசிஸ் என்பவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.
Tags:    

Similar News