ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 டீசர்

மாருதி சுசுகியின் புதிய கார் - அசத்தல் டீசர் வெளியானது

Published On 2019-08-03 11:00 GMT   |   Update On 2019-08-03 11:00 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கார் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் தனது புதிய எம்.பி.வி. ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆறு பேர் பயணிக்கக்கூடிய வகையில் உருவாகியிருக்கும் புதிய கார் எக்ஸ்.எல்.6 என அழைக்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் புதிய காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 இந்தியாவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மாருதியின் பிரபலமான எர்டிகா காரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் இந்தியாவில் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.



ஆறு பேர் பயணிக்கக்கூடிய எக்ஸ்.எல். 6 அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச்களின் படி புதிய காரின் வெளிப்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. மேம்பட்ட முன்புற வடிவமைப்பு, புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், பிளாக் இன்சர்ட் மற்றும் புதிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன.

காரின் உள்புறம் கேபின், டேஷ்போர்டு பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு சில்வர் அக்சென்ட் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் எர்டிகா டாப்-எண்ட் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகின்றன. 

மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 மாடலில் 1.5 லிட்டர் கே15-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் வழங்கப்படுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News