ஆட்டோமொபைல்
ஜாகுவார் ஐ பேஸ்

ஜெ-பேஸ் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. உருவாக்கும் ஜாகுவார்

Published On 2019-07-26 09:39 GMT   |   Update On 2019-07-26 09:39 GMT
ஜாகுவார் நிறுவனம் ஜெ-பேஸ் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



ஜாகுவார் நிறுவனம் ஜெ-பேஸ் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுகமானதும் இது ஜாகுவார் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனையாகும் எஃப்-பேஸ் மாடலை விட மேம்பட்டிருக்கும்.

புதிய ஜாகுவார் ஜெ பேஸ் மாடல் MLA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. ஜாகுவார் நிறுவனம் தனது எஃப்-பேஸ் எஸ்.யு.வி. மாடலை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து, 2016 இல் இதன் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டது. அன்று முதல் ஜாகுவார் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக எஃப்-பேஸ் இருக்கிறது.



பின் 2018 இல் ஜாகுவார் நிறுவனம் ஐ பேஸ் எனும் மாடலை அறிமுகம் செய்தது. ஐ பேஸ் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் மூலம் இயங்கும் ஐந்து கதவுகள் கொண்ட எஸ்.யு.வி. ஆகும். இந்நிலையில், ஜாகுவார் தனது ஜெ பேஸ் காரை உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ஜாகுவார் ஜெ பேஸ் கார் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் ஒன்று எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என்றும் தெரிகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் ஜாகுவார் அறிமுகம் செய்யும் கார்களில் நிச்சயம் ஒரு எலெக்ட்ரிக் வேரியண்ட் இருக்கும் என ஜாகுவார் அறிவித்திருந்தது.

அந்த வகையில் ஜாகுவார் ஜெ பேஸ் மாடலும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஜாகுவார் நிறுவனம் மைல்டு-ஹைப்ரிட், ஃபுல்- ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட், பியூர் எலெக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News