ஆட்டோமொபைல்
ஸ்கோடா ரேபிட் - கோப்புப்படம்

இந்தியாவில் ஸ்கோடா ரேபிட் ரைடர் அறிமுகம்

Published On 2019-07-17 10:22 GMT   |   Update On 2019-07-17 10:22 GMT
ஸ்கோடா இந்தியா நிறுவனம் ரேபிட் செடான் மாடலின் லிமிட்டெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.



ஸ்கோடா இந்தியா நிறுவனம் தனது ரேபிட் செடான் மாடலின் லிமிட்டெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடல் ஸ்கோடா ரேபிட் ரைடர் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 6.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு ஸ்போர்ட்டி காஸ்மெடிக் அப்டேட்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார் கேன்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் என இருவித நிறங்களில் மட்டும் கிடைக்கிறது.



காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய ரேபிட் ரைட் எடிஷனில் முன்புறம் பிளாக்டு-அவுட் கிரில், பிளாக்-சைடு ஃபாயில்கள், பிளாக்டு-அவுட் பி பில்லர்கள் மற்றும் டிரன்க் லிப் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் காரின் உள்புறம் டூயல்-டோன் எபோனி சேன்ட் இன்டீரியர்கள் ஐவரி ஸ்லேட் நிற சீட் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்கஃப் பிளேட்களில் ரேபிட் என எழுதப்பட்டுள்ளது. 

புதிய காஸ்மெடிக் அம்சங்கள் தவிர ரேபிட் ரைடர் எடிஷனில் டூயல் ஏர்பேக், ஆண்டி-கிளேர் IRVM, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய மூன்றடுக்கு சீட் பெல்ட், ரஃப் ரோடு பேக்கேஜ், என்ஜின் மொபைலைசர், ஃபுளோட்டிங் கோட் சிஸ்டம், ரியர் விண்ட்ஸ்கிரீன் டீஃபாகர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News