என் மலர்
நீங்கள் தேடியது "Skoda"
- ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் எஸ்யுவி மாடல் விலை மீண்டும் முன்பதிவு செய்யப்படுகிறது.
- புதிய ஸ்கோடா கோடியக் மாடல் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் கோடியக் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவை மீண்டும் துவங்கி இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட புது மாடல் விலை ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ல்கோடா கோடியக் மாடல் ஸ்டைல், ஸ்போர்ட்லைன் மற்றும் L&K என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்பதிவு துவங்கிய கையோடு கார் மாடல் விலையையும் ஸ்கோடா நிறுவனம் உயர்த்தி இருக்கிறது. ஸ்கோடா கோடியக் எஸ்யுவி மூன்று வேரியண்ட்களின் விலையும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த காருக்கான புதிய முன்பதிவுகள் 2023 முதல் காலாண்டுக்கானது ஆகும். 2023 ஆண்டுக்கான முன்பதிவு பல கட்டங்களாக பின்னர் துவங்கும். 2023 முதல் காலாண்டிற்கான வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.
ஸ்கோடா கோடியக் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
ஸ்கோடா கோடியக் ஸ்டைல் ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம்
ஸ்கோடா கோடியக் ஸ்போர்ட்லைன் ரூ. 38 லட்சத்து 49 ஆயிரம்
ஸ்கோடா கோடியக் L&K ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- இந்திய சந்தையில் இது ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. என்யாக் iV எலெக்ட்ரிக் கிராஸ்-ஓவர் மாடலே இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன் ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது. சமீபத்திய ஸ்பை படங்கள் பூனேவுக்கு அருகாமையில் எடுக்கப்பட்டுள்ளன. சாலையில் காணப்பட்ட ஸ்கோடா என்யாக் iV மாடல் எவ்வித மறைப்பும் இன்றி தெளிவாக காணப்படுகிறது.

Photo Courtesy: Twitter / @madhavrajpuroh2
இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தையிலும் என்யாக் iV மாடல் தான் ஸ்கோடா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்திய சந்தையில் புதிய ஸ்கோடா என்யாக் iV மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஸ்கோடா என்யாக் iV மாடல் 55 கிலோவாட் ஹவர், 62 கிலோவாட் ஹவர் மற்றும் 82 கிலோவாட் ஹவர் என மூன்று விதமான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. இவை முறையே 340 கிமீ, 360 கிமீ மற்றும் 510 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன. சர்வதேச சந்தையில் ஸ்கோடா என்யாக் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.
- ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய குஷக் மாடல் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை மாற்றியமைத்து இருக்கிறது.
ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அந்நிறுவனத்தின் வாகன விற்பனையை அடியோடு மாற்றியமைத்து இருக்கிறது. குஷக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் குஷக் மாடல் அறிமுகமாகி ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இந்த நிலையில், ஸ்கோடா நிறுவனம் 28 ஆயிரத்து 629 குஷக் யூனிட்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. ஜூன் 2022 வரையிலான விற்பனையில் இத்தனை யூனிட்கள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரத்து 386 யூனிட்களை ஸ்கோடா நிறுவனம் விற்றுள்ளது.

விற்பனையை மேலும் அதிகப்படுத்த ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலின் மற்றொரு புது வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. செமி கண்டக்டர் குறைபாடு மற்றும் விலை உயர்வு காலக்கட்டத்தில் மற்றொரு புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது அசத்தல் முடிவாக பார்க்கப்படுகிறது.
ஸ்கோடா அறிமுகம் செய்த புதிய குஷக் வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 09 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குஷக் ஸ்டைல் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மாடல் ஆகும். இதில் சன்ரூஃப் நீக்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கோடா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 7 சீட்டர் மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- இந்த மாடல் மிகவும் வித்தியாசமான இண்டீரியர் கொண்டு இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனம் புதிய விஷன் 7S கான்செப்ட் மாடல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஸ்கோடா விஷன் 7S டீசரில் புதிய காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் எனதெரியவந்துள்ளது. இந்த மாடல் எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட் ஆகும்.
ஸ்கோடா விஷன் 7S கான்செப்ட் மாடலில் 7 சீட்டர் செட்டப் உள்ளது. இது மிகவும் வித்தியாசமான 6+1 வடிவில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இதில் பெரியவர்கள் ஆறு பேரும், ஒரு இருக்கை குழந்தைகளை அமர வைக்க பிரத்யேகமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டேஷ்போர்டு கார் கதவுகள் வரை நீள்கிறது. முன்புற இருக்கையில் உள்ள ஹோல்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய விஷன் 7S மாடல் டிரைவிங் மற்றும் ரிலாக்சிங் என இருவித சூழல்களுக்கு ஏற்ப மாறிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டிரைவிங் மோடில் கண்ட்ரோல்கள் வழக்கமான கார்களில் இருப்பதை போன்றே காட்சியளிக்கிறது. ரிலாக்ஸ் மோடில் பின்புற இருக்கைகள் சற்றே பின்புறம் நகர்ந்து அதிக இடவசதியை ஏற்படுத்துகிறது. இது சவுகரியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
கடந்த மார்ச் மாத வாக்கில் ஸ்கோடா அறிவித்த முற்றிலும் புதிய டிசைன் மொழியை அடிப்படையாக கொண்டு ஸ்கோடா விஷன் 7S உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிசைன் மொழியில் ஸ்கோடா நிறுவனத்தின் மதிப்புகளை எடுத்துரைக்கும் திடத்தன்மை, செயல்பாடு மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றை சார்ந்து கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டி இருக்கிறது.
- இந்த கார் CKD முறையில் அதிகம் விற்பனையாகும் மாடல் ஆகும்.
ஸ்கோடா ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் 2001 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் இந்தியாவில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 111 யூனிட்களை வினியோகம் செய்து இருக்கிறது.
"ஆக்டேவியா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அசத்தலான டிசைன், தொழில்நுட்பம், சவுகரியம் மற்றும் சிறப்பான டைனமிக்ஸ் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் இந்த கார் தனக்கான பிரிவை உருவாக்கிக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் நண்பர்கள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்," என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்டு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.

நான்காம் தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 26 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது. இந்த மாடல் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 2 லிட்டர், 4 சிலிண்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 187 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா ஆக்டேவியா மாடல் 600 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புற இருக்கையை மடித்து வைக்கும் போது பூட் ஸ்பேஸ் 1555 லிட்டர்களாக அதிகரித்துள்ளது.




