ஆட்டோமொபைல்

மஹிந்திராவின் புதிய பொலிரோ கேம்பர் கோல்டு இசட்.எக்ஸ். இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-06-22 10:49 GMT   |   Update On 2019-06-22 10:49 GMT
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய பொலிரோ கேம்பர் ரக வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.



இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா புத்தம் புதிய பொலிரோ கேம்பர் ரக வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வாகனத்தில் முந்தைய மாடலை விட தலைசிறந்த அம்சங்கள் கூடுதல் சவுகரியத்தை வழங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

1000 கிலோ பேலோடு திறன் கொண்டிருக்கும் புதிய கேம்பர் வாகனத்தின் துவக்க விலை ரூ.7.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மஹிந்திராவின் இரட்டை கேபின் கொண்ட கேம்பர் மாடல் ஃபிளாக்‌ஷிப் வாகனமாக உருவாகி இருக்கிறது.

புத்தம் புதிய பொலிரோ கேம்பர் கோல்டு இசட்.எக்ஸ். மாடலில் 2.5 லிட்டர் m2DiCR ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 63 பி.ஹெச்.பி. பவர், 195 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இன்டிபென்டண்ட் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் புதிய பிக்கப் வாகனம் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 4-வீல் டிரைவிங் ஆப்ஷனுடன் கிடைக்கிறது.



பொலிரோ கேம்பர் கோல்டு இசட்.எக்ஸ். மாடலில் புதிய வடிவமைப்பு, முன்புறம் அழகிய கிரில் மற்றும் ரிஃப்லெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வாகனத்தின் தோற்றத்தை மேலும் பிரம்மாண்டமாக வெளிப்படுத்துகிறது. பொலிரோ கேம்பர் கோல்டு இசட்.எக்ஸ். மாடலின் பிரீமியம் வேரியண்ட் அதிக இட வசதியுடன் இரட்டை கேபின் வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

புதிய பிக்கப் வாகனத்தின் உள்புறம் டூயல்-டோன் ஸ்டைல், புதிய சென்ட்டர் கன்சோல், ஹெட்-ரெஸ்ட் கொண்ட ஃபாக்ஸ் லெதர் சீட்கள், சீட் ரெக்லைனர்கள், ஸ்லைடர்கள், பவர் விண்டோக்கள், பவர் ஸ்டீரிங் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News