ஆட்டோமொபைல்
ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6

விரைவில் இந்தியா வரும் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6

Published On 2019-09-09 09:50 GMT   |   Update On 2019-09-09 09:50 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பி.எஸ். 6 ஸ்பிளென்டர் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாட்டின் முதல் பி.எஸ். மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடல் வரும் நாட்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் பி.எஸ். 6 ஹீரோ ஸ்பிளென்டர் ஏற்கனவே விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது.

ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலை விட புதிய பி.எஸ். 6 மாடல் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் புதிய மாடலின் விலை 12 முதல் 15 சதவிகிதம் வரை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.



தற்சமயம் விற்பனையாகும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐ-ஸ்மார்ட் விலை ரூ. 57,000 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 விலை ரூ. 66,000 (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என தெரிகிறது. புதிய வாகனத்தை பிரபலப்படுத்தும் பணிகள் துவங்கியிருப்பதால், இது விரைவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.3 பி.ஹெச்.பி. பவர், 9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News