search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹீரோ மோட்டோகார்ப்"

    • பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.
    • 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. ஹீரோவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு விடா பிராண்டு விடா அட்வான்டேஜ் பேக்கேஜ் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.

    ஏற்கனவே விடா V1 ப்ரோ பயன்படுத்துவோர் புதிய அட்வான்டேஜ் பேக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பெற முடியும். இதில் இரண்டு பேட்டரிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படும்.

     


    இத்துடன் 2 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி, விடா வொர்க்ஷாப்களில் இலவச சர்வீஸ், 24x7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ், மை விடா செயலியில் உள்ள அனைத்து கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய விடா V1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • இந்த மாடல் ரோட்ஸ்டர் டிசைன் கொண்டிருக்கிறது.
    • டாப் என்ட் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள்- மேவ்ரிக் 440 மாடலை அறிமுகம் செய்தது. மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும் ஹீரோ மேவ்ரிக் 440 மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் X440 மாடல் உருவாக்கப்பட்டு இருக்கும் பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

    எனினும், இந்த மாடல் ரோட்ஸ்டர் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள்- ஆர்க்டிக் வைட், ஃபியர்லெஸ் ரெட், செலஸ்டியல் புளூ, ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் நிறங்கள் டாப் என்ட் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

    புதிய ஹீரோ மேவரிக் மாடலில் 440 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 ஹெச்.பி. பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் 320mm மற்றும் பின்புறம் 240mm டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலின் பேஸ் வேரியன்ட் ஸ்போக் வீல்களையும், மிட் மற்றும் டாப் என்ட் வேரியன்ட்களில் அலாய் வீல்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மேவரிக் 440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் செட்டப், H வடிவம் கொண்ட டி.ஆர்.எல்., டியுபுலர் ஹேண்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது.

    இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால், மெசேஜ் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன. இந்த பைக்கில் யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    விலையை பொருத்தவரை ஹீரோ மேவ்ரிக் 440 பேஸ் மாடல் ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் என்றும் மிட் வேரியன்ட் விலை ரூ. 2 லட்சத்து 24 ஆயிரம் என்றும் டாப் என்ட் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    • ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.
    • Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வரும் மாதங்களில் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அதிக திறன் கொண்ட புதிய ஹீரோ Xoom மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாடல் மேக்சி ஸ்கூட்டர் மற்றும் அட்வென்ச்சர் மாடலின் இடையில் நிலை நிறுத்தப்படும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் சற்றே வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கும் என்றும் இதில் 160சிசி என்ஜின் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. ஹீரோ Xoom சீரிசில் இது ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கலாம்.

     


    அந்த வகையில், புதிய ஹீரோ Xoom மாடலில் கீலெஸ் இக்னிஷன், ரிமோட் மூலம் சீட்-ஐ திறக்கும் வசதி, ஹீரோ காப்புரிமை பெற்ற i3s ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 156சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 14 ஹெச்.பி. பவர், 13.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இதுதவிர ஹீரோ நிறுவனம் Xoom 125R மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் Xoom 110 மாடலை போன்றே காட்சியளிக்கும். இதுதவிர எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படலாம்.

    ஹீரோ Xoom 125R மாடலில் ஏர் கூல்டு, 124.6சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 9.5 ஹெச்.பி. பவர், 10.14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் டி.வி.எஸ். என்டார்க், சுசுகி அவெனிஸ் மற்றும் ஹோண்டா டியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
    • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்தலாம்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்டார்ப்-அப் பிரான்டு சர்ஜ் தனது முதல் வாகனத்தை அறிமுகம் செய்தது. S32 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வாகனம் புதுவித பயன்பாட்டை கொண்டிருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கரங்களை கொண்ட பயணிகள் அல்லது சரக்கு வாகனம் ஆகும்.

    சொந்தமாக தொழில் செய்ய விரும்புவோரை குறிவைத்து இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இது போன்ற வாகனம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஹீரோ சர்ஜ் S32 மாடலை பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர ஆட்டோ ரிக்ஷா வடிவில் பயன்படுத்த செய்கிறது.

     


    கான்செப்ட் வடிவில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஹீரோ சர்ஜ் S32 மாடலை வாங்கும் போது பயனர்கள் ஒரே கட்டணத்தில் இரண்டு வாகனங்களை பெற முடியும். ஹீரோ சர்ஜ் S32 கொண்டு பயனர்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாகவும் பயன்படுத்தலாம். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 3 சக்கர வாகனமாக மாற்ற மூன்று நிமிடங்களே ஆகும்.

    சர்ஜ் S32 மாடல் தோற்றத்தில் 3 சக்கர எலெக்ட்ரிக் கார்கோ வாகனம் அல்லது ரிக்ஷா போன்றே காட்சியளிக்கிறது. இதன் முன்புற கேபினில் வின்ட்-ஸ்கிரீன், ஹெட்லைட்கள், டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. பட்டனை க்ளிக் செய்யும் போது முன்புற வின்ட்ஷீல்டு பகுதி மேலே உயர்ந்து, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியே வரும்.

     


    3 சக்கர வாகனம் மற்றும் ஸ்கூட்டர் இடையே பேட்டரி மற்றும் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் முறையே 10 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. 3 சக்கர வாகனத்தில் 11 கிலோவாட் ஹவர் பேட்டரியும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.5 கிலோவாட் ஹவர் பேட்டரியும் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனம் 500 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டிருக்கிறது.



    • ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாகியுள்ளது.
    • மேவரிக் 440 மாடல் ஐந்துவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய மேவரிக் 440 மோட்டார்சைக்கிள் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. ஹீரோ வொர்ல்டு 2024 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய மேவரிக் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் உடனான கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் X440 ரோட்ஸ்டர் மாடலை தழுவி உருவாகியுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹீரோ மேவரிக் 440 மாடல் ஐந்துவிதமான நிறங்கள் மற்றும் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதன் பேஸ் வெர்ஷன் ஸ்போக் வீல்கள், ஆர்க்டிக் வைட் எனும் ஒற்றை நிறத்தில் கிடைக்கிறது. மிட் வேரியன்ட் அலாய் வீல்கள், செல்ஸ்டியல் புளூ மற்றும் ஃபியர்லெஸ் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. டாப் என்ட் மாடல் மெஷின்டு அலாய், ஃபேண்டம் பிளாக் மற்றும் எனிக்மா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

     


    புதிய மேவரிக் 440 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் செட்டப், H வடிவம் கொண்ட டி.ஆர்.எல்., டியுபுலர் ஹேண்டில்பார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் முழுமையான எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால், மெசேஜ் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

    இந்த பைக்கில் யு.எஸ்.பி. சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஸ்லிப்பர்ட் கிளட்ச் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் 440சிசி, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஹார்லி டேவிட்சன் X440 மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 ஹெச்.பி. பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு மற்றும் வெளியீடு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. வினியோகம் ஏப்ரல் மாத வாக்கில் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். 

    • எக்ஸ்டிரீம் 200 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய எக்ஸ்டிரீம் 125R மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ வொர்ல்டு 2024 நிகழ்வில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 95 ஆயிரம் என்றும் ஏ.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ. 99 ஆயிரத்து 500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய எக்ஸ்டிரீம் 125R மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் எக்ஸ்டிரீம் 200 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஃபியூவல் டேன்க் மற்றும் பின்புறம் ஸ்ப்லிட் சீட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் சில்வர், பிளாக் மற்றும் ரெட் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

     


    இதில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.5 ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடலில் 37mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு முன்புறம் டிஸ்க், பின்புறம் டிஸ்க் மற்றும் டிரம் என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், எல்.சி.டி. ஸ்கிரீன், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்திய சந்தையில் புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடல் டி.வி.எஸ். ரைடர் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. 

    • என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்.
    • எக்ஸ்டிரீம் சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டம்.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அடுத்த வாரம் தனது மேவரிக் 440 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹார்லி டேவிட்சன் உடனான கூட்டணியில் ஹீரோ பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் முதல் மோட்டார்சைக்கிள் மாடல் இது ஆகும். இந்த மோட்டார்சைக்கிளுடன் ஹீரோ நிறுவனம் என்ட்ரி லெவல் மோட்டார்சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    மேவரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் வகையில், பல்வேறு டீசர்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹீரோ எக்ஸ்டிரீம் 125R மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. புதிய 125R மூலம் ஹீரோ நிறுவனம் எக்ஸ்டிரீம் சீரிஸ் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

     


    புதிய எக்ஸ்டிரீம் 125R மாடலில் எல்.இ.டி. லைட்டிங், ஸ்லென்டர் எல்.இ.டி. இன்டிகேட்டர்கள், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த மாடலில் 124.7சிசி ஏர் கூல்டு Fi என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதே என்ஜின் ஹீரோவின் கிளாமர் மோட்டார்சைக்கிளிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    செயல்திறனை பொருத்தவரை கிளாமர் மாடலை போன்றே 11 பி.எஸ். பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மோட்டார்சைக்கிள் டி.வி.எஸ். ரைடர் 125 மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    • எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.
    • சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையை உயர்த்தியது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த முறை ஹீரோ இருசக்கர வாகனங்கள் விலை 1 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

    ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வில் வேறுபாடு இருக்கும் என்று தெரிகிறது. இந்த விலை உயர்வில் ஸ்பிலெண்டர் மற்றும் பேஷன் உள்ளிட்டவைகளின் விலை குறைந்த அளவிலேயே உயரும் என்று கூறப்படுகிறது. மாறாக எக்ஸ்டிரீம் மற்றும் எக்ஸ்பல்ஸ் மாடல்களுக்கு அதிக விலை உயர்வு அறிவிக்கப்பட இருக்கிறது.

    சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கரிஸ்மா XMR விலையில் ரூ. 7 ஆயிரத்தை உயர்த்தியது. அந்த வகையில், தற்போதைய விலை உயர்வில் இந்த மாடல் சேர்க்கப்படாது என்று கூறப்படுகிறது. பண்டிகை காலம் துவங்க இருப்பதை தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகன விலையை அதிகப்படுத்தி வருகின்றன.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் விற்பனையை அதிகப்படுத்தும் சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட பலன்களை வாகன விற்பனையாளர்கள் அறிவிப்பர் என்று தெரிகிறது.

    • ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட் உள்ளது.
    • இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கரிஸ்மா XMR விலையை உயர்த்துகிறது. அதன்படி அக்டோபர் 1-ம் தேதி முதல் கரிஸ்மா XMR விலை ரூ. 7 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. முன்னதாக ரூ. 1 லட்சத்து 72 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கரிஸ்மா XMR அடுத்த மாதம் முதல் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 900 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

     

    இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது.
    • புதிய ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, என்ஜின் உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரபலமான கரிஸ்மா பிரான்டை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் கரிஸ்மா XMR 210 என்று அழைக்கப்படுகிறது.

    புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

     

    இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கரிஸ்மா XMR 210 மாடலில் முற்றிலும் புதிய சேசிஸ், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோஷாக், பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.

     

    இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளில் ஏர்-கூல்டு 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் உள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கிளாமர் மோட்டார்சைக்கிள், 2020 வாக்கில் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது.

    இந்திய சந்தையில் ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 82 ஆயிரத்து 348 மற்றும் ரூ. 86 ஆயிரத்து 348 என்று நிர்ணம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     

    புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளில் ஏர்-கூல்டு 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.5 ஹெச்.பி. பவர், 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கிளாமர் மோட்டார்சைக்கிளில் 240mm டிஸ்க் அல்லது 130mm டிரம் பிரேக், 130mm டிரம் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் எளிமையான கம்யுட்டர் மாடல் ஆகும். இதில் ஹீரோ நிறுவனத்தின் i3s ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், டிஜிட்டல் டேஷ்போர்டு, யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் 125 நியான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் முற்றிலும் புதிய 210சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது.
    • ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது கரிஸ்மா XMR 210 மோட்டார்சைக்கிள் டீசரை வெளியிட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 29-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய டீசரின் படி ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடல் மங்களகரமான மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது. இதே போன்ற நிறம் ஹீரோ முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை கரிஸ்மா மாடலிலும் வழங்கப்பட்டது.

    டிசைனை பொருத்தவரை புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் நவீன தோற்றம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் கூர்மையான கோடுகளை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்ப்லிட் சீட் செட்டப் வழங்கப்படுகிறது. ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் முற்றிலும் புதிய 210சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த என்ஜின் 25 ஹெச்.பி. பவர், 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக்குகள், டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலின் விலை ரூ. 2 லட்சத்தில் துவங்கும் என்று தெரிகிறது. இந்த மாடல் பஜாஜ் பல்சர் RS200, யமஹா R15 மற்றும் சுசுகி ஜிக்சர் SF 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ×