என் மலர்
பைக்

புதிய Xoom 160 மாடல்... ஒருவழியாக விநியோக அப்டேட் கொடுத்த ஹீரோ மோட்டோகார்ப்
- யூனிட் 14.6bhp பவர் மற்றும் 14Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- மோட்டார் CVT ஆட்டோமேடிக் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய Xoom 160 அட்வென்ச்சர் மேக்சி-ஸ்கூட்டர் விநியோகங்களை விரைவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஹீரோ நிறுவனம் கடந்த ஜூலை மாத வாக்கில் Xoom 160 மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹீரோ Xoom 160 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த மாடலின் டெலிவரிகள் தொடங்கப்பட இருந்த நிலையில், பல்வேறு தடைகள் காரணமாக தாமதங்களை சந்தித்தது.
அட்வென்ச்சர்-ஸ்டைல் மேக்சி-ஸ்கூட்டரில் புதிய 156சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த யூனிட் 14.6bhp பவர் மற்றும் 14Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார் CVT ஆட்டோமேடிக் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரே அட்வென்ச்சர் மேக்சி ஸ்கூட்டர் Xoom 160 ஆகும். மேலும் இதன் வடிவமைப்பு அதற்கு நிறைய பொருத்தமாக இருக்கும். அம்சங்களின் அடிப்படையில், இது LED லைட்டிங், ரிமோட் கீ இக்னிஷன், ஸ்மார்ட் கீ மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பெறுகிறது. இதற்கு நேரடி போட்டியாக வேறு எந்த மாடலும் இல்லை. எனினும், ஹீரோ Xoom 160 மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 உடன் போட்டியிடுகிறது.






