என் மலர்
பைக்

புதிய Xoom 160 மாடலுக்கான புக்கிங்கை தொடங்கிய ஹீரோ மோட்டோகார்ப்- முழு விவரங்கள்
- புதிய ஹீரோ Xoom 160 மாடல் 156 சிசி லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
- 142 கிலோ எடையுள்ள இந்த ஸ்கூட்டர் சுமார் 40 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனம் இந்தியாவில் Xoom 160 ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த மேக்சி ஸ்கூட்டர் கடந்த ஜனவரி மாதம் ரூ.1.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நிகழ்வில் வெளியிடப்பட்ட Xoom 160 மாடலுக்கான டெலிவரி ஆகஸ்ட் 2025 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சின் விவரங்கள்:
புதிய ஹீரோ Xoom 160 மாடல் 156 சிசி லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 8,000 ஆர்பிஎம்மில் 14.6 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனைப் பயன்படுத்துகிறது. 142 கிலோ எடையுள்ள இந்த ஸ்கூட்டர் சுமார் 40 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.
வடிவமைப்பு:
வடிவமைப்பை பொருத்தவரை ஹீரோ Xoom 160 மாடலில் உயரமான விண்ட்ஸ்கிரீன் மற்றும் சிங்கில் பீஸ் இருக்கை, தனித்துவமான டூயல் பாட் LED ஹெட்லைட் ஆகியவற்றுடன் கரடுமுரடான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் நீண்ட விண்ட்-ஸ்கிரீன் மற்றும் டூரிங் பாக்ஸையும் பெறலாம். இந்த மேக்சி ஸ்கூட்டர் 1983 மில்லிமீட்டர் நீளம், 772 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 787 மில்லிமீட்டர் இருக்கை உயரம் கொண்டுள்ளது. ஹீரோ Xoom 160 மாடலின் வீல்பேஸ் 155 மில்லிமீட்டரில் உள்ளது.
அம்சங்கள்:
அம்சங்களைப் பொருத்தவரை, ஹீரோ Xoom 160 மாடலில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் சிஸ்டம், LED விளக்குகள், கீலெஸ் இக்னிஷன், ABS, ரிமோட் சீட் ஓப்பனிங் மற்றும் பலவற்றைக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகிறது.
ஹீரோ ஜூம் 160: விலை மற்றும் மாறுபாடுகள்
ஹீரோ Xoom 160 மேக்ஸி ஸ்கூட்டர் ரூ.1,48,500 விலையில் கிடைக்கிறது. மேலும், இந்திய சந்தையில்- மேட் ரெயின்ஃபாரெஸ்ட் கிரே, சம்மிட் ஒயிட், கேன்யன் ரெட் மற்றும் மேட் வோல்கானிக் கிரே என நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.






