என் மலர்
பைக்

வேற லெவல் பாதுகாப்பு... எக்ஸ்ட்ரீம் பைக்கை அப்டேட் செய்த ஹீரோ மோட்டோகார்ப்..!
- புதிய வண்ணங்கள் பைக்கின் தோற்றத்திற்கு புத்துணர்ச்சியை சேர்க்கின்றன.
- இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்துள்ளது. அதன்படி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R இப்போது புதிதாக டூயல் சேனல் ஏபிஎஸ் (ABS) வேரியண்டில் கிடைக்கிறது. இந்திய சந்தையில் புதிய டூயல் சேனல் வேரியண்டின் விலை ரூ. 1.04 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக் சிங்கிள்-சேனல் ABS வேரியண்டிலும் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 92,500 ஆகும். சிங்கிள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் பைக்குகளுக்கு இடையிலான விலை வேறுபாடு சுமார் ரூ. 12,000 ஆகும். எனினும், கூடுதல் பணம் வலுவான பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
வெளிப்புறத்தில், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R- பிளாக் பியர்ல் ரெட், பிளாக் மேட்-ஷேடோ கிரே மற்றும் பிளாக் லீஃப் கிரீன் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது . இந்த புதிய வண்ணங்கள் பைக்கின் தோற்றத்திற்கு புத்துணர்ச்சியை சேர்க்கின்றன.
இந்த பைக்கில் கலர் எல்சிடி டிஸ்ப்ளே, குரூயிஸ் கட்டுப்பாடு, இகோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கிறது. இயந்திர ரீதியாக, பைக் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. இதிலும் 125cc, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த யூனிட் 8,250rpm இல் 11.24bhp பவர் மற்றும் 6,500rpm இல் 10.5Nm டார்க் உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R மோட்டார்சைக்கிள் ஹோண்டா CB 125 ஹார்னெட் மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக விளங்குகிறது. இந்த பிரிவில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட ஒரே பைக் எக்ஸ்ட்ரீம் 125R ஆகும்.






