ஆட்டோமொபைல்

சுசுகி 2018 GSX-S750 இந்தியாவில் வெளியானது

Published On 2018-04-30 08:05 GMT   |   Update On 2018-04-30 08:05 GMT
இந்தியாவில் சுசுகி 2018 GSX-S750 மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளின் விலை மற்றும் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

இந்தியாவில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2018 GSX-S750 மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய நேக்டு மோட்டார்சைக்கிள் முன்னதாக நடைபெற்ற 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. புதிய 2018 சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிளின் விநியோகம் இன்னும் சில வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன.

2018 சுசுகி GSX-S750 ஒட்டுமொத்த வடிவமைப்பு முந்தைய GSX-S1000 மாடலை போன்று நேக்டு வடிவில் காட்சியளிக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் தோற்றம் கம்பீரமாகவும், ஸ்போர்ட் தோற்றத்தில் முன்பக்கம் கூர்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் கவாசகி Z900, டிரையம்ப் ஸ்ட்ரீட் டிரிப்பிள் எஸ் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் டுகாட்டி மான்ஸ்டர் 821 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும்.



புதிய சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிளில் 749 சிசி இன்-லைன், 4-சிலிண்டர், லிக்விட்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 114 பிஎஸ் பவர், 81 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. முன்பக்கம் டிசைன்கள் பெரிய GSX-S1000 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் கூர்மையான கம்பீர தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் மஸ்குலார் ஃபியூயல் டேன்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பின்புறமும் GSX-S750 மெல்லிய ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது.

எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில்-டைடி டிசைன் கொண்டிருக்கிறது. இதன் மிகப்பெரிய பின்புற டையர் மோட்டார்சைக்கிள் தோற்றத்தை மேலும் அழகாக்குகிறது. முன்பக்கம் அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கரங்களிலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதி கொண்ட டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது.

2018 சுசுகி GSX-S750 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ரூ.7.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News