ஆட்டோமொபைல்

பஜாஜ் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை அதிரடி மாற்றம்

Published On 2018-04-04 10:50 GMT   |   Update On 2018-04-04 10:50 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றியமைத்துள்ளது.
புதுடெல்லி:

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை மாற்றியமைத்துள்ளது. கதடந்த மாதம் பஜாஜ் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் பல்சர் ஆர்எஸ் 200, வி15, டிஸ்கவர் 125 மற்றும் பிளாட்டினா மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டாமினர் 400 ஏபிஎஸ் மாடல் விலை ரூ.2000 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.1,58,275 மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் ரூ.1,42,113 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 ஏபிஎஸ் இல்லாத மாடலின் விலை ரூ.1,800 அதிகரிக்கப்பட்டு ரூ.1,24,890 என்றும் ஏபிஎஸ் மாடல் விலை ரூ.1,36,794 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் என்எஸ் 160 மாடலின் விலை மாற்றியமைக்கப்படவில்லை. பஜாஜ் பல்சர் 220 எஃப் மற்றும் பல்சர் 180 மாடல்களின் விலை முறையே ரூ.94,682 மற்றும் ரூ.82,650 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 



பல்சர் என்எஸ் 200 ஏபிஎஸ் இல்லாத மாடலின் விலை ரூ.1700 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.98,714, ஏபிஎஸ் மாடல் விலை ரூ.1,10,714 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பஜாஜ் அவென்ஜர் 220 க்ரூஸ் மற்றும் ஸ்ட்ரீட் மாடல் விலை ரூ.1,000 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.94,464 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் அவென்ஜர் 180 விலை ரூ.1100 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ.84,346க்கு விற்பனை செய்யப்பசடுகிறது. என்ட்ரி-லெவல் வி12 மாடலின் விலை மாற்றப்படாத நிலையில் வி15 விலை ரூ.1000 அதிகரிக்கப்பட்டு ரூ.65,178க்கு விற்பனையாகிறது.

மேம்படுத்தப்பட்ட டிஸ்கவர் 125 டிஸ்க் பிரேக் மாடலின் விலை ரூ.55,994 என மாற்றப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டிஸ்கவர் 125 ஸ்டேன்டர்டு மாடல் ரூ.53,171க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பஜாஜ் பிளாட்டினா மாடலின் விலையில் ரூ.500 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ.47,155 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News