ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஹோன்டா X-பிளேடு முன்பதிவு துவங்கியது

Published On 2018-02-15 10:49 GMT   |   Update On 2018-02-15 10:49 GMT
ஹோன்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 160சிசி X-பிளேடு மோட்டார்சைக்கிள் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் ஹோன்டா நிறுவனம் அறிமுகம் செய்த 160சிசி ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் X-பிளேடு முன்பதிவு இந்தியாவில் துவங்கியுள்ளது.

எல்இடி ஹெட்லைட், டூயல் அவுட்லெட் போர்ட் சைலென்சர், லின்க்-டைப் கியர் ஷிஃப்டர், ஸ்ப்லிட் கிராப்-ரெயில்கள், அலாய் வீல், முன்பக்க டிஸ்க் பிரேக், ஹக்கர் ஃபெண்டர் மற்றும் மஸ்குலார் கிராஃபிக்ஸ் கொண்டுள்ளது. 

ஹோன்டா X-பிளேடு மோட்டார்சைக்கிளில் 162.71 சிசி HET இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்- சர்வீஸ் டியூ இன்டிகேட்டர் மற்றும் கியர் பொசிஷன் இன்டிகேட்டருடன் வழங்கப்பட்டுள்ளது. 1347 மில்லிமீட்டர் வீல்பேஸ், அகலமான 130 செக்ஷன் டியூப்லெஸ் பின்புற டையர் வழங்கப்பட்டுள்ளது. 



இவ்வகை டையர் இந்தியாவின் மோசமான சாலைகளிலும் சிறப்பான பேலண்ஸ் வழங்குகிறது. இத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கும் சௌகரியமான அனுபவத்தை வழங்குகிறது. மேட் மார்வெல் புளூ மெட்டாலிக், மேட் ஃபுரோஸென் சில்வர் மெட்டாலிக், பியல் ஸ்பாட்டன் ரெட், பியல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் ஹோன்டா X-பிளேடு மோட்டார்சைக்கிள் விலை ரூ.79,000-க்குள் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) அனைவரையும் கவரும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோன்டா X-பிளேடு விநியோகம் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News