ஆட்டோமொபைல்
பாஸ்டேக்

பாஸ்டேக் கால அவகாசத்தில் திடீர் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2020-12-31 10:42 GMT   |   Update On 2020-12-31 10:42 GMT
இந்தியாவில் பாஸ்டேக் வைத்திருப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.


சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் பாஸ்டேக் முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி வாகன உரிமையாளர்கள் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்டநேரம் நிற்காமல், பாஸ்டேக் அட்டையில் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு விரைவாக செல்ல முடியும்.
 
2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது பாஸ்டேக் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டு இருந்தது.

தற்சமயம் சுங்கச்சாவடியை கடக்கும் 85 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்களில் பாஸ்டேக் உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. மேலும் பாஸ்டேக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வாகனங்களில் பாஸ்டேக் நடைமுறை பிப்ரவரி 15, 2021 முதல் கட்டாயம் என தெரிவித்து இருக்கிறது.

சுங்கச்சாவடிகளுக்கு அருகே வாகன ஓட்டிகளுக்கு வசதியாக பாஸ்டேக் பெறுவதற்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News