விருச்சகம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-02-12 03:52 GMT   |   Update On 2024-02-12 03:53 GMT

12.2.2024 முதல் 18.2.2024 வரை

சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உடன் பிறந்த வர்களிடையே நிலவிய மனக் கசப்பு, பகை விலகும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம். சகோதரர்களின் கவுரவக் குறைவான நடவடிக்கைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.

சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிக ரிக்கும். மேல திகாரியின் நன்மதிப்பை பெறுவீர்கள். தந்தையால் நிம்மதியும் ஏற்படும். தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும். அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழி யர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சை களைத் தவிர்க்க வேண்டும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு உடல் நலனை பாதுகாக்க வேண்டும். தினமும் கந்த குரு கவசம் படிக்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News