என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை

    30.11.2025 முதல் 6.12.2025 வரை

    விருச்சிகம்

    திறமைகளால் மதிப்பு உயரும் வாரம். ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும்.

    நோய் தொந்தரவுகள் அகலும். சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும். 5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும்.

    நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 23.11.2025 முதல் 29.11.2025 வரை

    23.11.2025 முதல் 29.11.2025 வரை

    விருச்சிகம்

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கைக்கு குரு பார்வை உள்ளது. நல்ல எண்ணங்கள் சிந்தனைகள் மூலம் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்வீர்கள். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கூடிவரும். வீடு, வாகன யோகம், புத்திர பாக்கியம் உண்டாகும்.

    வீட்டில் திருமணம் போன்ற சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழிச் சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அண்டை அயலாருடன் இருந்த சண்டை சச்சரவுகள், பிணக்குகள் மறையும்.

    ஏழாம் இடத்திற்கு சனி செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. ஓரிரு வாரங்களுக்கு திருமணம் முயற்சியை ஒத்தி வைப்பது நல்லது. சிலருக்கு பருவநிலை மாற்றம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைய முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை

    16.11.2025 முதல் 22.11.2025 வரை

    விருச்சிகம்

    தடைபட்ட நல்ல முயற்சிகள் துரிதமாகும் வாரம். ராசியில் உள்ள சூரியன் செவ்வாய், புதனுக்கு குரு பார்வை உள்ளது. சூரியனை குரு பார்ப்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். ஆன்மபலம் பெருகும். பூர்வீக குலத் தொழிலில் ஏற்றமான பலன் உண்டு.

    வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணி அதிகரிக்கும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். சிலர் வேலையை மாற்றலாம். வீடு கட்டும் பணி துரிதமாகும்.

    சிலர் வீடு, மனை அல்லது புதிய வாகனம் வாங்கலாம். குடும்ப சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். அழகு ஆடம்பர துணி நகைகள் கிடைக்கும். குல இஷ்ட தெய்வ வழிபாடு நன்மைகளை மிகைப்படுத்தும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 9.11.2025 முதல் 15.11.2025 வரை

    9.11.2025 முதல் 15.11.2025 வரை

    விருச்சிகம்

    அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். உடன் இணைந்த 8, 11-ம் அதிபதி புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார். பணபரஸ்தான இயக்கம் வலுவாக உள்ளதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும். மூத்த சகோதர வழியில் சில பொருள் வரவு ஏற்படலாம். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குலத் தொழில் விருத்தியடையும்.

    சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். 10.11.2025 அன்று பகல் 1.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை ஒத்தி வைக்கவும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கோட்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத காலத்தில் மனிதனுக்கு பொறுமையும் தன்னம்பிக்கையும் மிக அவசியம். தினமும் முருகனை வழிபட வினைகள் தீரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 2.11.2025 முதல் 8.11.2025 வரை

    2.11.2025 முதல் 8.11.2025 வரை

    விருச்சிகம்

    கற்பனைகள், கனவுகள் நனவாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 8,11ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றிருக்கிறார். பணபர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குவதால் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லாத வாரம். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. தொழில் மாற்றம் செய்யும் சிந்தனை அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். வீடு, மனை, திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். 8.11.2025 அன்று பகல் 11.14 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அக்கம் பக்கத்தினரின் தீய பார்வையால் ஆரோக்கியம் குறையும். தினமும் விநாயகரை வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கூடும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை

    26.10.2025 முதல் 1.11.2025 வரை

    விருச்சிகம்

    தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றுள்ளார். 8,11ம் அதிபதி புதனுடன் குரு பார்வையில் சேர்ந்து உள்ளார். திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுப்பெறுவீர்கள். எதிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

    வர வேண்டிய பணங்களில் ஏதேனும் தடை தாமதங்கள் இருந்தால் இந்த வாரத்தில் முயற்சி செய்யலாம். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். திறமை வெளிப்படும். வழக்குகள் சாதகமாகும். சமுதாய அந்தஸ்து நிறைந்த பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.

    பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன கனவு நனவாகும். தாய் வழி முன்னோர்களிட மிருந்து நில, புலன், பணம் கிடைக்கும். கந்த சஷ்டி அன்று செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை

    தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும் வாரம்.ராசியில் உள்ள புதனுக்கு குரு பார்வை உள்ளது. முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.

    மறு திருமண முயற்சி சாதகமாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தம்பதிக ளிடையே இணக்கமான சூழல் நிலவும். தீபாவளி யன்று உணவு உடை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 12.10.2025 முதல் 18.10.2025 வரை

    நல்ல செயல்கள் நடைபெறும் வாரம். இந்த வார இறுதிவரை தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் விலகும். ஆதாயம் தரும் விதத்தில் தொழில் முன்னேற்றம் இருக்கும். பணி புரியும் இடத்தில் உங்கள் திறமைகள் போற்றப்படும். சிலர் தீபாவளி முடிந்தவுடன் பார்க்கும் வேலையை மாற்றலாம். வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பங்குச் சந்தையில் ஈடுபட்டவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

    வெளிநாடு செல்வதில் நிலவிய விசா பிரச்சினை சீராகும். ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் திருமண முயற்சிக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.

    உடல் ஆரோக்கியத்தில் நிலவிய தொல்லைகள் சீராகும். 12.10.2025 அதிகாலை 2.25 மணி முதல் 14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை

    5.10.2025 முதல் 11.10.2025 வரை

    உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். 2,5-ம் அதிபதி குரு அதிசாரமாக கடக ராசிக்கு சென்று உச்சம் பெறுகிறார். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம்.

    மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். நோய் பாதிப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும். விருச்சிக ராசி வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி. யோகம் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். குரு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம்.

    எனினும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் பணமாக மாறலாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். பெண்கள் தங்க நகைகளை அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் புதுப்பிக்கவும். தினமும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வதன் மூலம் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை

    28.9.2025 முதல் 4.10.2025 வரை

    முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சாரம் செய்கிறார். சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கூடும். சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும்.

    அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். இளம் வயதினருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கத் துவங்கலாம். தள்ளிப்போன வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சி சாதகமாகும்.

    பெண்கள் நண்பிகளுடன் இணைந்து தீபாவளிக்கு ஏற்ற சீசன் வியாபார முயற்சியில் ஈடுபடுவார்கள். நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். புரட்டாசி மாத சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பூர்வீகம் சார்ந்த பிரச்சினைகள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை

    21.9.2025 முதல் 27.9.2025 வரை

    வளமான வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் புதன் சேர்க்கை சனி பகவானின் பார்வையில் ஏற்பட்டுள்ளது. லாபாதிபதி புதனும் தொழில் ஸ்தான அதிபதி சூரியனும் இணைவதால் செல்வாக்கு அதிகரிக்கும். இழு பறியாகக் கிடந்த அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். பிறர் வியக்கும் வண்ணம் உங்கள் வாழ்க்கையில் வளம் உண்டாகும்.

    பேச்சிலும் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் தெளிவு இருக்கும். சிறிய முதலீடுகள் பெரிய லாபத்தை பெற்று தரும். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் சீராகும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வீடு, வாகனம், ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். உங்களின் குடும்ப, தனிப்பட்ட விஷயங்களை அறிமுகம் இல்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் கல்வியில் முழு கவனத்தை செலுத்த வேண்டிய நேரம். கை கால் மூட்டு வலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். கட்சிக்காக உழைத்து சளைத்த அரசியல்வாதிகள் பிரபலமாகும் நேரமாகும். நவராத்திரி காலங்களில் துர்க்கை காளி வழிபாடு செய்வதால் வெற்றி நடை போட முடியும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை

    14.9.2025 முதல் 20.9.2025 வரை

    தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். சக பணியாட்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தொழிலில் நிலவும் எதிர்ப்புகளை எதிர் நீச்சலடித்து வெற்றி பெறுவீர்கள். அரசு உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகளுக்கு மிக மிக சாதகமான நேரம்.

    உபரி வருமானத்தை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு புதிய நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாறாக ஸ்திர சொத்துக்களில் முதலீடு செய்யலாம். பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். நிம்மதியான உறக்கம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன்கள் அமையும்.

    14.9.2025 அன்று இரவு 8.03 முதல் 17.9.2025 அன்று 12.28 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். நம்பிக்கை துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நல்ல ஜீரண சக்தி நிறைந்த உணவுகளை சாப்பிடவும். மகாளய பட்ச காலங்களில் உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ பித்ருக்கள சாபம் நீங்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×