என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை

    7.9.2025 முதல் 13.9.2025 வரை

    சாதகமும் பாதகமும் நிறைந்த வாரம். ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பாக்கியாதிபதி சந்திரன் ராகுவால் கிரகணப்படுத்தப்படுகிறார். உலவுகின்ற கிரக நிலை ஓரளவு சுமாராக உள்ளது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் துணிச்சலும் தன்னம் பிக்கையும் அதிகரிக்கும். கடுமையான உழைப்பால் சமாளிப்பீர்கள்.

    கடன், ஆரோக்கியம், வம்பு வழக்கு தொடர்பான விசயங்களில் கவனம் தேவை. பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்கை ஒத்திப்போடுவது நல்லது. அடுத்தவர் பேச்சைக் கேட்டு மனம் குழப்பாமல் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

    பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நேரம். வியாபாரத்தில் போட்டியாக புதிய எதிரிகள் தோன்றுவார்கள். விரும்பிய அரசு உதவிகள் உடனடியாகக் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உரிய வழிபாடு செய்து பித்ருக்களை வழிபட்டால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

    31.8.2025 முதல் 6.9.2025 வரை

    லாபகரமான வாரம்.ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். மலை போல வந்த துயரம் பனி போல் விலகும். தொழில், வியாபார நெருக்கடி நிலை மாறும். பூர்வீகச் சொத்தைப் பிரிப்பதில் தாய் மற்றும் தந்தை சகோதரருக்கு சாதகமாக செயல்படுவார்கள். செல்வச் செழிப்பு கூடும். எதிர் கால வாழ்வா தாரத்திற்குத் தேவையான சேமிப்பை உயர்த்த ஏற்ற நேரம்.

    அரசின் ஒப்பந்ததாரர்கள், குத்தகை தாரர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். வீடு, மனையில் புதிய முதலீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பாளர்களின் நட்பு கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் ஓடி வரும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

    பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் நிவர்த்தியாகி திருமண வாய்ப்பு தேடி வரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். பிரதோஷ நாட்களில் நந்திய பகவானுக்கு பஞ்சா மிர்தம் அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவிதமான செல்வமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை

    எண்ணியது ஈடேறும் வாரம். 10-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். உங்களை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட உங்களது திறமைகளை உணர்வார்கள். வாழ்க்கையை நகர்த்துவதில் இருந்த சிரமங்கள் சீராகும். நிம்மதியாக இருப்பீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அகலும். வட்டிக்கு வட்டி கட்டிய நிலைமாறும். சொல்வாக்கால் மற்றவர்களால் மதித்திடக்கூடிய நிலையை அடைவீர்கள். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார்.

    பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் சுப. விசேஷங்கள் நடக்கும். தொலைந்த கைவிட்டுப் போன பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு தாயார் மூலம் திரண்ட சொத்து அல்லது பெரிய அதிர்ஷ்ட தொகை கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க ஏற்ற காலம். தாயின் உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு.விநாயகருக்கு வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

    விருச்சகம்

    வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை

    17.8.2025 முதல் 23.8.2025 வரை

    சுதந்திரமாக செயல்படும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்தை எந்த கிரகமும் பார்க்காமல் இருப்பது நல்லது. ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. எந்தக் மனபாரமும் இல்லாமல் சிந்தித்து நிதானமாக செயல்படுவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

    நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன மன ஸ்தாபங்கள் முடிவிற்கு வரும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

    பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். திருமண வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். ஆயுள் பயம் அகலும். 18.8.2025 அன்று மதியம் 2.40 முதல் 20.8.2025 அன்று மாலை 6.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சுத் திறமையால் எதையும் சமாளிக்க முடியும். தேவையற்ற கோபத்தை குறைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. முருகன் வழிபாட்டால் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை

    10.8.2025 முதல் 16.8.2025 வரை

    தந்தையால் உயர்வு அடையும் வாரம். தந்தைக்கு காரக கிரகமான சூரியன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களின் தொழில் வளர வாழ்வாதாரம் உயர தந்தை உதவி செய்வார். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

    வெளிநாட்டு வணிகம், உணவுப் பொருட்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் நல்ல பலன் தரும். கூட்டுத் தொழில்கள் சிறப்படையும், பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் பல நடக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு லட்டு படைத்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை

    3.8.2025 முதல் 9.8.2025 வரை

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும். வேலை இழப்பு ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்றவற்றால் அதிருப்தி ஏற்படும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கோட்சாரம் சற்று சுமாராக இருக்கும் போது பிரச்சினையை விட்டு ஒதுங்கி வாழப் பழகினால் பெரிய பாதிப்பு ஏற்படாது. சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருந்தால் எந்த கெடு பலனும் ஏற்படாது. முக்கிய பணிகள் ஆரம்பத்தில் தடை, தாமதங்களை ஏற்படுத்தினாலும் முடிவில் காரிய வெற்றியைத் தரும்.

    சக்திக்கு மீறிய கடன், தேவையற்ற பேச்சைக் குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உணவு ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். வரலட்சுமி விரத நாளில் மகா லட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

    27.7.2025 முதல் 2.8.2025 வரை

    திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சனி பார்வையில் சஞ்சரிக்கிறார். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பாவுடன் நல்லிணக்கம் உண்டாகும்.

    வசீகரமான தோற்றப் பொழிவு உண்டாகும். உங்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும். உடலில் இருந்த பிணிகள் ஓடி ஒளியும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். உணவுப் பொருள் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஏற்ற காலம். சிலருக்கு பழைய தொழிலில் இருந்து விடுபட்டு புதிய தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும்.

    பணப்புழக்கம் அதிகரிப்பதால் ஆடம்பரச் செலவு செய்யும் வகையில் வாழ்வாதாரம் உயரும். குரு தீட்சை, ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். தந்தையின் வாரிசு அரசு வழி வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். தாய்மை அடைந்த பெண்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கும். நாக சதுர்த்தி அன்று இடுப்பில் சர்ப்பம் தரித்த விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை

    20.7.2025 முதல் 26.7.2025 வரை

    திருமணத்தடை அகலும் வாரம். ராசிக்கு செவ்வாய் சுக்கிரன் பார்வை. சமூக அந்தஸ்து அதிகரிக்கும். சுய ஜாதக ரீதியான தோஷங்களும், சாபங்களும் விலகி திருமணத் தடை அகலும். சிலருக்கு விரும்பிய பெண்ணை நிச்சயம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அல்லது தாய் வழி உறவில் சம்பந்தம் வரும்.

    மறுதிருமண முயற்சி தடையின்றி நடக்கும். மேல் அதிகாரிகளின் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஏற்றமான நேரம். கண் சிகிச்சை பலன் தரும். கலைத் துறையினர் பலர் படப்பிடிப்பிற்கு வெளியூர், வெளிநாடு செல்வார்கள்.

    அரசியல் வாதிகளின் எண்ணங்கள் ஈடேறும். 22.7.2025 அன்று காலை 8.15 மணி முதல் 24.7.2025 காலை 10.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை. ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பட்டுப் புடவை அணிவித்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை

    13.7.2025 முதல் 19.7.2025 வரை

    சுபசெய்திகளால் மனம் மகிழும் வாரம். ராசிக்கு செவ்வாய் மற்றும் சுக்கிரன் பார்வை உள்ளது. தற்போது ஓய்வில்லாமல் உழைக்கக் கூடிய நேரம். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். அரசு வேலைக்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கிய குறைபாட்டை சரி செய்ய புதிய வைத்திய முறையை நாடுவீர்கள்.

    நிச்சயித்த திருமணத்தை தள்ளிப்போடாமல் ஆவணியில் நடத்துவது நல்லது. மாமனார் மூலம் பூமி வயல், தோட்டம் கிடைக்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். தந்தை உயில் எழுதுவதில் சர்ச்சைகள் உண்டாகி பாகப்பிரிவினை இழுபறியாகும். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும்.

    ஒரு சிலருக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளும் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்து வந்த தடைகள் நீங்கும். புத்திரர்களால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தினமும் கந்தர் அநுபூதி கேட்கவும் அல்லது படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

    6.7.2025 முதல் 12.7.2025 வரை

    நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் துரிதமாக நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இதுவரை நீங்கள் அனுபவித்த சங்கடங்கள் அகன்று நன்மைகளும், ஆதாயங்களும் உண்டாகப் போகிறது. பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கடன் சுமை குறையும். ஜாமீன் வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

    தந்தை வழி ஆதாயம், தொழிலில் முன்னேற்றம், லாபம், மகிழ்ச்சி என்று எல்லா வகையிலும் சாதகம் உண்டாகப்போகிறது. உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் மறையும். செல்வாக்கு அந்தஸ்து உயரப்போகிறது. தடைபட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்றி முடிக்க உகந்த காலம். வீடு அல்லது வேலைமாற்றம் செய்யலாம்.

    பிள்ளைகளின் திருமணம், உத்தியோகம், உயர்கல்வி போன்றவற்றால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. பவுர்ணமி அன்று வீரபத்திரரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை

    29.6.2025 முதல் 5.7.2025 வரை

    நிம்மதியான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். எண்ணங்கள் நிறைவேறும். சுய முயற்சிகள் வெற்றி தரும். எவரும் செய்ய தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். பணம் சம்பாதிக்க பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்.

    ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். மனைவி வழி சொத்து கிடைக்கும். தொழில் விருத்தி உண்டாகும். தொழிலில் தன வரவு தாராளமாக வந்து சேரும். அங்காளி, பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு சீராகும்.

    அரசியல் ஆர்வலர்கள் கட்சிக்காகவும், பொதுமக்களுக்காவும் மிகுதியாக உழைக்க வேண்டிய நேரம். மற்றவர்களுக்கு வாக்குக்கொடுப்பதையோ முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும். செவ்வாய் கிழமை முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை

    22.6.2025 முதல் 28.6.2025 வரை

    எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்க்கிறார்.பொருளாதார தேவைகள் நிறைவு பெறும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். தந்தையுடன் ஏற்பட்ட பிணக்குகள் விலகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும்.

    அடமானத்தில் இருந்த வீடு, வாகனம், நிலபுலன், நகை அனைத்தும் மீண்டு வரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் குடும்ப பாரத்தை சுமக்க நேரும். திருமணத் தடை அகலும். கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ,மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள்.

    24.6.2025 இரவு 11.45 முதல் 27.6.2025 அன்று காலை 1.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். அமாவாசையன்று வயது முதிர்ந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×