மீனம் - வார பலன்கள்

இந்த வார ராசி பலன்

Published On 2024-05-27 04:09 GMT   |   Update On 2024-05-27 04:09 GMT

27.05.2024 முதல் 02.06.2024 வரை

செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும் வாரம். 2,9ம் அதிபதி செவ்வாய் வார இறுதியில் ஆட்சி பலம் பெறுகிறார். இது மீனத்திற்கு சுப பலனை இரட்டிப்பாக்கும் அமைப்பாகும். வேற்று மொழிப்புலமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். குடும்பத்திற்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கை நழுவிச் சென்ற தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகமாகும். ஏழரைச் சனி மற்றும் ராசியில் உள்ள ராகு 7ல் உள்ள கேது தாக்கத்தால் சிலர் கூட்டுக் குடும்பத்தில் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். திருமண வரன் பற்றி தெளிவாக விசாரித்து முடிவு எடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News