ஆன்மிக களஞ்சியம்

புனிதம் நிறைந்த துளசி தீர்த்தம்

Published On 2024-02-02 12:38 GMT   |   Update On 2024-02-02 12:38 GMT
  • தீர்த்தம் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதை புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.
  • சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நமக்கு நன்மை தருவதாகும்.

துளசி என்பது ஆன்மிகம் சார்ந்த பொருள் அல்ல.

அது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒரு பொருளாகவே தற்போது வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் முழு மூச்சுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பெருமாளை தரிசனம் நடத்தி முடித்ததும் தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

தீர்த்தம் சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதை புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர்.

இதன் புனிதத் தன்மையையும், தூய்மையையும் நம்பாதவர்கள் இதன் பயன்களை அங்கீகரிப்பது இல்லை.

இந்து மதத்தவர்கள் வீடுகளில் இறை சமமாக கருதியே துளசி செடியை நட்டு வழிபடுகிறார்கள்.

துளசி மாடம் கட்டி விளக்கேற்றி பராமரிக்கவும் செய்கிறார்கள்.

கோவிலில் கிடைக்கும் துளசி தீர்த்தத்துக்கு மருத்துவ குணங்கள் உண்டு என்று நாம் கண்டறிந்துள்ளோம்.

துளசி தீர்த்தத்திற்காக நாம் கோவிலுக்கு செல்ல வேண்டியது இல்லை.

வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயார் செய்யலாம்.

சுத்தமான நீரை விட துளசி தீர்த்தம் பல ஆயிரம் மடங்கு நமக்கு நன்மை தருவதாகும்.

வீட்டிலேயே துளசி தீர்த்தம் தயாரிக்கும் முறையை நம் மூதாதையர்கள் கடை பிடித்துக் கொண்டு வந்துள்ளனர்.

ஒரு பாத்திரத்தில் சுத்தமான குடிநீர் எடுத்து அதில் 4 அல்லது 5 துளசி இலைகளை பறித்து இட்டு வைத்து தீர்த்தமாக உபயோகிக்கலாம்.

Tags:    

Similar News