செய்திகள்

வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2019-05-18 13:27 GMT   |   Update On 2019-05-18 13:27 GMT
இரணியல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரணியல்:

இரணியல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராமகணேசன்.

நேற்று ராமகணேசன் மற்றும் போலீசார் மாலையில் காரங்காடு குருசடி பகுதியில் வாகன தனிக்கையில் ஈடு பட்டுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும் டெம்போவில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். மேலும் வாகனத்தில் இருந்த மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதற்கு அந்த வாலிபர் எந்த தகவலையும் கூற மறுத்து உள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அதில் வாலிபர் ஒருவர் போதையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றவே டெம்போவில் வந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது சட்டையை கிழித்து கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதுகுறித்து இரணியல் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேனியல் சேசுபாதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு டெம்போவில் வந்த குமார், மகேஷ் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News