செய்திகள்

சச்சின் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா

Published On 2019-06-10 06:56 GMT   |   Update On 2019-06-10 10:38 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை ரோகித்சர்மா படைத்தார். அவர் 37 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தினார். தெண்டுல்கர் 40 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் 44 இன்னிங்சிலும் 2 ஆயிரம் ரன்னை எடுத்து இருந்தனர்.



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தவானின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 17-வது செஞ்சூரியை பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் அவருக்கு 4-வது சதமாகும். இதன்மூலம் இங்கிலாந்தில் அதிக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

ஐ.சி.சி. போட்டிகளில் தவான் 6-வது செஞ்சூரியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் அவர் சங்ககரா (இலங்கை), பாண்டிங் (ஆஸ்திரேலியா) ஆகியோருடன் இணைந்தார். தெண்டுல்கரும், கங்குலியும் 7 சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளனர்.



ரோகித் சர்மா-தவான் ஜோடி நேற்று முதல் விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்தது. 16-வது முறையாக இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளனர். கங்குலி- தெண்டுல்கர் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 21 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ரோகித்-தவான் ஜோடி உள்ளது.
Tags:    

Similar News