செய்திகள்

ரபேல் விமான முறைகேடு புகாரில் மோடி பதில் சொல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- தேவேகவுடா

Published On 2019-01-06 12:55 GMT   |   Update On 2019-01-06 12:55 GMT
ரபேல் விமான முறைகேடு புகாரில் பிரதமர் மோடி பதில் சொல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #pmmodi #Rafael #nirmalasitharaman

பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் ரபேல் விமான விவாதத்தில் சிறப்பாக தனது கருத்துக்களை எடுத்துரைத்து வாதிட்டார். ஆனால் இது பிரதமர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு.

இந்த வி‌ஷயத்தில் எனது கருத்து என்னவென்றால் பிரதமரோ அல்லது வேறு தலைவர்களோ யார் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதோ? அவர் தான் பதில் அளித்து இருக்க வேண்டும். அந்த வகையில் பிரதமர் பாராளுமன்றத்தில் பங்கேற்று பதில் அளித்து இருக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க மறுப்பது ஏன்? அதிலிருந்து தப்பிக்க ஏன் முயற்சிக்கிறார். அவர் நேரடியாக பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் இருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


தனது விளக்கத்தை சொல்வதற்கு மோடி டி.வி. பேட்டியை பயன்படுத்தி இருக்கிறார். இது சரியான நடவடிக்கையாக தெரியவில்லை. பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தில் எதிர்க் கட்சிகளின் கேள்விகளை எதிர்கொண்டு அதற்கு பதில் அளித்து இருக்க வேண்டும் என்றார். #DeveGowda #pmmodi #Rafael #nirmalasitharaman

Tags:    

Similar News