செய்திகள்

சாதிகளின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் எடுபடாது: எடியூரப்பா

Published On 2018-10-20 02:07 GMT   |   Update On 2018-10-20 02:07 GMT
வரும் காலங்களில் சாதி, மதங்களின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் அது எடுபடாது என்று கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.
மங்களூரு :

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான எடியூரப்பா சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு அவர் தனது மகனும், சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “சாதி, மதங்களை பிரிக்க முயற்சி மேற்கொண்டதால்தான் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததாக மந்திரி டி.கே.சிவக்குமாரே ஒப்புக் கொண்டுவிட்டார். இதன்மூலம் அவரும், காங்கிரசாரும் தங்களது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை சாதி, மதங்களால் பிரிக்க நினைக்கக் கூடாது. வரும் காலங்களில் சாதி, மதங்களின் பெயரில் மக்களிடம் வாக்கு கேட்டால் அது எடுபடாது. நான் தற்போது சொன்ன பதில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்குத்தான். என்னைப்பற்றி குறை கூறி வரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு அல்ல. மேலும் நான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை” என்று கூறினார்.
Tags:    

Similar News