செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து

Published On 2019-06-09 18:41 GMT   |   Update On 2019-06-09 18:41 GMT
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யப்படும் என போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:

தமிழகத்தில் தற்போது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனத்தில் செல்பவர்கள், செல்போன்களில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள், சிக்னலை மீறி வாகனத்தில் செல்பவர்கள் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் கடந்த 5 மாதங்களில் 37 ஆயிரத்து 338 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்யலாமே? என்று கேள்வி எழுப்பியது. அதன் அடிப்படையில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் இதுபோன்ற கடும் நடவடிக்கை பாயும் என்று உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News