செய்திகள்

கணவனின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை

Published On 2019-04-27 13:12 GMT   |   Update On 2019-04-27 13:12 GMT
முத்தியால்பேட்டையில் கணவனின் குடிப்பழக்கத்தினால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை முத்தியால் பேட்டை மாணிக்க முதலி யார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வேலன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவரது மனைவி கஸ்தூரி (வயது 32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையே மது குடிக்கும் பழக்கம் உள்ள வேலன் அடிக்கடி சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல் நேற்றும் வேலன் வேலைக்கு செல் லாமல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை கஸ்தூரி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கஸ்தூரி தனது தாய் மல்லிகாவிடம் செல்போனில் பேசினார். பலமுறை கணவன் குடித்து விட்டு தகராறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா தனது உறவினர்களுடன் மகள் வீட்டுக்கு வந்தார். அங்கு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அப்போது மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் கஸ்தூரி தூக்கு போட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். பின்னர் தூக்கில் இருந்து கஸ்தூரியை மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கஸ்தூரி பரிதாப மாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அரியாங்குப்பம் கோட்டை மேடு சேரன் வீதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (52). கார் டிரைவர். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

சம்பத்குமார் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். என்றாவது ஒரு நாள் டிரைவர் வேலைக்கு சென்றாலும் அந்த பணத்தை வீட்டு செலவுக்கு கொடுப்பதில்லை.

அது போல் சம்பவத்தன்று டிரைவர் வேலைக்கு சென்ற சம்பத்குமார் அந்த பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் அதனை செலவழித்தார். இதனை காயத்ரி கண்டித்தார். இதனால் மனமுடைந்த சம்பத்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

வீட்டில் இருந்த எலி மருந்தை (வி‌ஷம்) அவர் தின்று விட்டார்.இதில் மயங்கி கிடந்த சம்பத்குமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு சம்பத்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் வினாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News